தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசை விஷாலுக்கும் ஸ்ரீஜாவுக்கும் நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசைக்கு சவால் விட்ட ஸ்ரீஜா:
அதாவது விஷால் இசை சொல்வதை கேட்டு ஸ்ரீஜாவிடம் இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல அவளும் மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்கிறாள். அடுத்து இசையும் ஸ்ரீஜாவும் நேருக்கு நேராக சந்திக்க இசை நான் இந்த வீட்டிற்கு மருமகளா வரலைனா கூட பரவாயில்ல, ஆனால் உன்னை மருமகளாக விட மாட்டேன் என்று சொல்கிறாள். பானுமதி சரியான நேரத்துக்கு இசை எப்படி வந்தா? என்று குழப்பம் கொள்கிறாள்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்த ஸ்ரீஜா இசையிடம் நான் விஷாலை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன? என்று கோபப்பட இசை விஷால் என்னை தான் காதலிக்கிறாரு, அவர் நெஞ்சுல என் பேரை பச்சை குத்தி இருப்பாரு போய் பாரு என்று சொல்ல ஸ்ரீஜாவும் இதை பார்த்து ஷாக் ஆகிறாள்.
விஷாலுக்கு முத்தம் கொடுக்கப்போகும் இசை:
விஷாலிடம் இது பற்றி கேட்க அவன் தவறுதலாக நடந்ததாக சொல்கிறான், அடுத்து ஸ்ரீஜா விஷாலை கட்டி பிடித்து என்னால் முத்தம் கொடுக்க முடியும்.. உன்னால் முடியுமா? என்று கேட்க என்னால் முடியும் என இசை சவால் விடுகிறாள்.
பிறகு எல்லாரும் சாப்பிட உட்கார இசை விஷாலுக்கு முத்தம் கொடுக்க தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.