ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் தர்மலிங்கம் தீபாவை வீட்டிற்குள் அழைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, தீபா கார்த்திக்கிடம் அப்பாவிடம் என்ன சொன்னீங்க என்று கேட்க, உண்மையை சொன்னேன் என்று கார்த்திக் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் “தீபாவை விட தான் வந்தேன், நான் கிளம்பறேன்” என்று சொல்லி கிளம்புகிறான்.
மறுபக்கம் ஐஸ்வர்யா தீபாவை விட போன கார்த்திக்கை இன்னமும் காணோம், தர்மலிங்கம் குடும்பம் அவ்வளவு பேசிட்டு ஏதோ பிளான் போட்டு இருக்காங்க என்று சொல்லி ஏற்றி விட, அபிராமி கார்த்திக் போன் செய்ய அவன் தீபாவை விட்டுட்டு கிளம்ப போறேன், இன்னும் 2 மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன் என்று சொல்கிறான்.
அடுத்து கார்த்திக் காரில் ஏறி உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்ய ஸ்டார்ட் ஆகவில்லை, என்ன செய்வது என்று யோசிக்கும் கார்த்திக் பக்கத்தில் இருந்த ஜூஸை எடுத்து குடிக்க கையெல்லாம் கரையாகி விட தீபா தண்ணீர், சோப்பு மட்டும் டவலை கொண்டு வந்து கொடுக்கிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் கிளம்ப தயாராக அந்த நேரம் பார்த்து அங்கு வரும் ஊர்க்கார்கள் காப்பு கட்டி இருக்கு, ஊரை விட்டு யாரும் வெளியே போக கூடாது என்று சொல்கின்றனர்.
மேலும் தர்மலிங்கத்திடம் “நம்ம ரூபஸ்ரீ கச்சேரியை தான் வச்சிருக்கோம், நீங்க மாப்பிளையை உள்ள கூட்டிட்டு போங்க” என்று சொல்லி கிளம்ப கார்த்திக் அபிராமிக்கு போன் செய்து ஊரை விட்டு வர முடியாத சூழல் உருவானதை பற்றி சொல்ல ஷாக்காகும் அபிராமி சரி நீ இருந்துட்டு வா என்று சொல்லி போனை வைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.