ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கார்த்திகை தீபம்.


முந்தைய எபிசோடில் கார்த்திக் தீபாவிடம் காரணம் கேட்க, தீபா இப்போதைக்கு என்னால் எந்த விஷயமும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்ட நிலையில், இனிமே நீங்களா சொல்லும் வரை நான் கேட்க மாட்டேன் என்று கார்த்திக் பதில் கொடுக்க, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


இனியன் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கார்த்திக் காரணம் கேட்கிறான். அதற்கு “ஊர்ல சைக்கிள் போட்டியில் நடக்குது, ஆனா எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது” என்று வருத்தமாக சொல்ல, “அவ்வளவு தானே விஷயம்.. நான் உனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுத் தரேன்” என்று சொல்லி கிரவுண்டுக்கு அழைத்துச் செல்கிறான்.


கிரவுண்டில் கார்த்திக் இனியனுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்க, அந்த சமயம் அந்த வழியாக வந்த குணாவின் ஆள் கார்த்திக் தனியாக இருப்பதை பார்த்துவிட்டு குணாவுக்கு போன் செய்து தகவல் கொடுக்க, அவர்கள் கார்த்தியை பழி தீர்க்க அந்த கிரவுண்டுக்கு கிளம்பி வருகின்றனர்.


மறுபக்கம் அபிராமி “தீபா வீட்டுக்கு போன கார்த்திக் இன்னும் வீட்டுக்கு வரல, கூடிய சீக்கிரம் வீட்டுக்கு வந்துடனும்” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு காரில் சென்று கொண்டிருக்க, அவளுக்கு போன் கால் ஒன்று வருகிறது. போனை வைத்ததும் பதற்றத்துடன் ஹாஸ்பிடலுக்கு அபிராமி கிளம்பி வருகிறாள்.


அங்கே ஐஸ்வர்யா காத்திருக்க, “உங்கள நட்சத்திரா பார்க்கணும்னு சொன்னா” என்று சொல்ல, “அவ எதுக்கு என்னை பார்க்க வேண்டும்” என்று அபிராமி கேள்வி எழுப்புகிறாள். அதற்கு, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, பாத்துட்டு என்னன்னு கேளுங்க” என்று சொல்லி உள்ளே அழைத்துச் செல்ல, அபிராமி நட்சத்திராவிடம் “என்னை எதுக்கு வர சொன்ன? நீ எதுக்கு என்னை பாக்கணும்” என்று கேள்வி எழுப்புகிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவு பெறுகிறது.