Ethir neechal September 11 promo : குணசேகரன் மிரட்ட மிரண்டு போன நந்தினி...  விசாலாட்சி அம்மா செய்த கோல்மால்... கலகலப்பான இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் 

Ethir neechal September 11 promo :* குணசேகரனிடம் மாட்டிக்கொண்ட நந்தினி * மருமகளுக்காக கோல்மால் செய்யும் விசாலாட்சி அம்மா இன்றைய எதிர் நீச்சலில் என்ன நடக்கிறது

Continues below advertisement

 

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி தனது முதல் சமையல் ஆர்டருக்காக சமைத்து அனைத்தையும் தயாராக வைத்துள்ளாள். வயதானவர்களுக்கு என்பதால் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து சமைத்ததால் சற்று படபடப்பாக இருக்கிறாள். அனைத்து உணவுகளையும் ஈஸ்வரி மற்றும் ரேணுகாவிடம் கொடுத்து திரும்ப திரும்ப சரி பார்க்க சொல்கிறாள். அவர்கள் சூப்பராக இருக்கு என சொன்னாலும் ஒரு வித படபடப்புடனே இருக்கிறாள். 

 


அந்த நேரத்தில் கரிகாலன் எதைவது மறைக்குறீங்களா? என சந்தேகப்படுகிறான். எதை எதையோ சொல்லி அவனை சமாதானப்படுத்தி காபியை கையில் கொடுத்து அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஜனனி கார் ஒன்றை பூக் செய்து காத்திருக்கிறாள். அந்த வண்டி வந்ததும் சக்திக்கு போன் செய்து பாத்திரங்களை எல்லாம் வெளியில் எடுத்து வர சொல்கிறார்கள். 

நந்தினி இருந்தாலும் ஒரு முறை யாரவது வெளியில் இருக்கிறார்களா என்பதை செக் செய்து கொள்கிறேன் என எட்டிப்பார்க்க அங்கே கரிகாலன் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருக்கிறான். அதை பார்த்தது நந்தினி ஷாக்காகிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

கரிகாலனிடம் இருந்து எப்படியோ தப்பித்து பாத்திரங்களை ஜனனி அழைத்து வந்த காரில் ஏற்றி கொண்டு இருக்கிறார்கள். நல்ல வேலையாக அந்த நேரம் பார்த்து வீட்டில் பிரச்சினை செய்பவர்கள் யாரும் இல்லாததால் வேகவேகமாக வேலையை செய்கிறார்கள். அந்த நேரம் பார்த்து குணசேகரன் காரில் வந்து இறங்குகிறார்.


நந்தினியும் மற்றவர்களும் சமைத்த உணவுகளை வண்டியில் ஏற்றுவதை பார்த்து சந்தேகப்பட்டு "ஏதோ சோறாக்கி எங்கேயோ எடுத்துட்டு போற மாதிரி இருக்கு" என கேட்டிறார். "சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காதீங்க. அப்புறம் சாமி குத்தமாயிட போகுது" என பதட்டத்திலும் தைரியமாக பேசுகிறாள் நந்தினி. "சரி நாலு பேரும் சேர்ந்து போயிட்டு வந்துருவோம்" என்கிறான் கதிர். "நாலு நாற்பது எல்லாம் மாமாவுக்கு சுத்தமா ஆகாத நம்பர்" என எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய "ஏய் மரியாதையா உண்மைய சொல்லு " என மிரட்டுகிறார் குணசேகரன். திருதிருவென முழித்த நந்தினியையும் மற்றவர்களையும் போக சொல்லி சொல்லிவிடுகிறார்.

 

ரேணுகாவும் ஈஸ்வரியும் வாசலருகே எதுவும் தெரியாதது போல நிற்கிறார்கள். உள்ளே சென்ற குணசேகரன் "சோத்தை கட்டி வீட்டு பொம்பிளைகளை எங்க அனுப்பி இருக்கு" என விசாலாட்சி அம்மாவிடம் நேரடியாக கேட்காமல் கதிரை விட்டு கேட்க சொல்கிறார். அந்த நேரத்தில் ரேணுகா வாசலில் இருந்தபடிய சைகை மூலம் விசாலாட்சி அம்மாவுக்கு சிக்னல் கொடுக்கிறாள். ஆமா என சொல்லுங்க என ரேணுகா சைகை செய்யவும் விசாலாட்சி அம்மாவும் அதையே அவர்களிடத்தில் ஒரு கதைக்கட்டி விடுகிறார். அதை அண்ணன் தம்பிகள் மூவரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola