விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோட்டில், காட்டில் தொலைந்த ஈஸ்வரியை கண்டுபிடித்து பாக்கியா அழைத்து வருகிறாள். அந்த சமயத்தில் இனியாவுக்கு போன் செய்த கோபி "நான் உடனே அங்கு வருகிறேன் நம்ம பாட்டியை தேடி கண்டுபிடித்துவிடலாம். நீ பயப்படாத" என சொல்ல இனியா "அதெல்லாம் தேவை இல்லை டாடி. பாட்டி கிடைச்சுட்டாங்க" என சொல்கிறாள். கோபி பாக்கியாவிடம்போனை கொடுக்க சொல்லி "நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. இன்னைக்கு நைட்டுக்குள்ள என்னோட அம்மாவும் பொண்ணும் இங்க இருக்கணும்" என சொல்ல பாக்கியா ஃபோனை கட் செய்து விடுகிறாள்.
மறுபடியும் கோபி ஈஸ்வரிக்கு போன்செய்து திரும்ப அதையே பேசி உடனே கிளம்பி வரச்சொல்ல கடுப்பான ஈஸ்வரி "புது இடத்திற்கு வந்துட்டா அப்படி இப்படினுதான் இருக்கும். சும்மா போன் பண்ணி பண்ணி எதையாவது சொல்லிகிட்டே இருக்காத" என திட்டி ஃபோனை வைத்து விடுகிறார்.
”கேன்டீனில் அமிர்தா அனைவரும் வேலை செய்கிறார்களா என பொறுப்பாக பார்த்து கொண்டு இருக்கிறாள். நிலாவும் அமிர்தாவுடன் இருக்க, ராதிகா வந்து அமிர்தாவை வம்புக்கு இழுக்கிறாள். குழந்தையை வைத்து கொண்டு எப்படி வேலை செய்ய முடியும். பார்த்துக்கொள்ள யாரும் இல்லையென்றால் அது உங்களுடைய பர்சனல் விஷயம்" என சொல்ல ராமமூர்த்தி வந்து குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி அழைத்து சென்று விடுகிறார்.
பாக்கியாவிடம் இனியா சில ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க வேண்டும் என சொல்ல "இதை எல்லாம் நீ வரும்போது எடுத்துட்டு வரமாட்டியா. எங்க போய் ஸ்டேஷனரி ஷாப் தேடறது?" என கேட்கிறாள். அந்த நேரத்தில் அமிர்தா பாக்கியாவுக்கு போன் செய்து கேன்டீனில் கோபி செய்தவற்றை பற்றி சொல்கிறாள். இனியா போய் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் எங்கே இருக்கிறது என விசாரித்துவிட்டு திரும்பும் போது நாலு ரவுடிகள் இனியாவை சுற்றி வளைக்கிறார்கள். அவர்களை பார்த்து இனியா பயத்தில் பதட்டப்படுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.