ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா திட்டமிட்டபடி கார் ஆக்சிடெண்ட் நடந்த நிலையில், அபிராமிக்கு எதுவும் நடக்கவில்லை.
தொடர்ந்து அபிராமி தீபாவை சந்திக்க செல்ல தீபா வீட்டுக்கு வந்த அபிராமி, கோயிலுக்கு சென்றிருந்த தீபாவுக்காக காரில் காத்திருக்கிறாள். மறுபக்கம் குணாவின் ஆட்கள் தீபாவை கடத்த முயற்சி செய்கின்றனர். தொடர்ந்து அபிராமிக்காக காத்திருந்த கார்த்திக் அவள் வராத காரணத்தினால் ஏர்போர்ட் கிளம்பிச் செல்கிறான்.
இந்த நிலையில், இன்று நடத்தப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்...
கார்த்திக் கிளம்பி விட்டதாக தகவல் அறிந்து அபிராமி பதறுகிறாள். என் பையனை பார்த்தே ஆகணும் என பரிதவிக்கிறாள். மீனாட்சி இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் காத்திருந்தார். பிளைட்டுக்கு நேரமாகுதுன்னு இப்பதான் கிளம்பி போகிறார் என்று சொன்னால் அபிராமி வேகமாக ஏர்போர்ட்டுக்கு கிளம்பி வருகிறாள்.
மறுபக்கம் குணாவின் ஆட்கள் தீபாவை சென்னைக்கு கடத்தி வந்து வைத்திருக்க அவர்களிடம் வலிப்பு வந்தது போல் நடித்து எஸ்கேப் ஆகிறாள் தீபா. சென்னையில் தான் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்ட தீபா கார்த்திக் சாரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ஒரு ஆட்டோ பிடித்து ஏர்போர்ட் கிளம்பி வருகிறாள்.
கார்த்திக் ஏர்போர்ட்டுக்குள் நுழைய மீனாட்சி எப்படி அவனை தடுத்து நிறுத்தி தீபாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என யோசிக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: 'கேம் ஆட தெரியல.. நீ மொத கெளம்பு..' பிரதீப் ஆண்டனியிடம் சீறிய விஷ்ணு - பிக்பாஸ் ப்ரமோவில் இன்று