விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் சந்தோஷமான செய்தி ஒன்றை சொல்கிறேன் என சொல்லி பாக்கியா கேன்டீன் காண்ட்ராக்ட் எடுப்பதற்காக புதிய ஆபீசுக்கு சென்ற இடத்தில், அந்த காண்ட்ராக்ட் அவளுக்கு கிடைக்காத படி செய்துவிட்டேன் என சொல்லி சந்தோஷப்படுகிறார்.
அதற்கு ராதிகா சந்தோஷப்படுவாள் என எதிர்பார்த்தால், டல்லாக இருக்கிறாள். ‘என்ன ஆச்சு’ என கோபி கேட்க "பாக்கியாவுக்கு இனி எங்கேயுமே காண்ட்ராக்ட் கிடைக்க கூடாது. இல்ல அவங்க காசே இல்லாம கஷ்டப்படணும் என நான் என்னைக்குமே நெனச்சது கூட கிடையாது. அவங்க நம்ம கண் முன்னாடி இருக்க கூடாது அப்படினு மட்டும் தான் நினைச்சேன்" என்கிறாள்.
"ஆனா பாக்கியா வேற மாதிரி நினைக்குறாங்க போல. நாம இருக்குற இடமா பார்த்து சுத்தி சுத்தி வர மாதிரி இருக்கு" என்கிறாள் ராதிகா. அதற்கு மேலும் தூபம் போடுவது போல கோபி "நம்ம அவளை பார்த்து பொறாமை படணும். அதுதான் அவளுடைய பிளான். வெளி உலகத்துக்கு நல்லவ அப்பாவி மாதிரி முகத்தை காட்டுறா. நாம என்னவோ அவளை டார்ச்சர் செய்ற மாதிரி காட்டிப்பா. பயங்கரமான கேடி அவளோட உண்மையான சுயரூபம் யாருக்கும் தெரியல. திரும்பவும் சாம்பார் பொடி, ரசம் பொடி இதை அரைச்சு தான் காலத்தை ஓட்டணும் " என்கிறார் கோபி.
ஜெனி குழந்தையுடன் வீட்டுக்கு வருகிறாள். அவளை அனைவரும் சந்தோஷமாக ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். செழியன் ஜெனியை ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்கிறான். எழில் செழியனை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறான். பிறகு அனைவரும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி ஜெனியிடம் குடும்பத்தின் முதல் வாரிசை பெற்றுக் கொடுத்தது நினைத்து ரொம்ப சந்தோஷம் என சொன்னதும், எழிலுக்கும் அமிர்தாவுக்கும் முகமே மாறிவிடுகிறது. பின்னர் பாக்கியா “அது தான் நிலா பாப்பா இருக்குறா இல்லையா” என சொல்லி அந்த சூழலை மாற்றுகிறாள்.
பின்னர் ஜெனியுடன் ரூமில் செழியன் பேசிக்கொண்டு இருக்கும் போது பாக்கியா வந்து ஜெனிக்கு பால் எடுத்து வந்து கொடுக்கிறாள். அப்போது செழியனுக்கு மாலினி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்கிறாள். பாக்கியா யார் போன் செய்து கொண்டே இருப்பது என கேட்க என்னுடைய காலேஜ் ப்ரெண்ட் என சொல்லி சமாளிக்கிறான் செழியன். பாக்கியா நம்பாமல் சந்தேகத்துடன் பார்க்கிறாள்.
பின்னர் செழியன் மாலினியின் போனை எடுத்து பேசுகிறான். " நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். ஏன் நீங்க வீட்டுக்கு வருகிறேன் என சொல்லிட்டு வரவே இல்ல" எனக் கேட்க "நான் உன்னை பார்க்கணும் மாலினி" என சொல்கிறான் செழியன். வீட்டுக்கு வர சொல்லி மாலினி சொன்னாலும், வேண்டாம் வழக்கமாக மீட் பண்ணும் ரெஸ்டாரண்டுக்கு வர சொல்லி சொல்கிறான் செழியன்.
மாலினியும் செழியனும் ரெஸ்டாரெண்டில் சந்திக்கிறார்கள். செழியன் மாலினியிடம், “இந்த உறவு நீடிக்காது. நான் என்னுடைய குழந்தையுடன், ஜெனியுடன் டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. நீ எனக்கு ஒரு கம்பர்ட் பீல் கொடுத்த. அதை என்னால அவாய்ட் பண்ண முடியல. நீ ரொம்ப எமோஷனல் ஆகுற. என்னை விட்டுரு" என்கிறான். "நீ என்னோட லைஃபில் கூடவே இருக்கணும். நாம வேணுனா கல்யாணம் பண்ணிக்கலாமா" என மாலினி சொன்னதும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான் செழியன். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.