ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க பரமேஸ்வரி பாட்டி கொலு பூஜைக்கு இவர்களை அழைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அபிராமி பரமேஸ்வரி வீட்டுக்குப் போக, அருணாச்சலம் “என்னாச்சு?” என்று கேட்கிறார். “என் தம்பி சரவணன் இருப்பான்.. அவள் கண்டிப்பா பிரச்சனை பண்ணுவான்” என பயப்படுகிறார்.
மறுபக்கம் மீனாட்சி தீபாவிடம் “என்ன தீபா பயமா இருக்கா? இந்த கொலுவில் நிறைய போட்டி நடக்கும், எல்லாம் உனக்கு தெரிந்ததா தான் இருக்கும். நீ அந்தப் போட்டியில் ஜெயித்து வைர நெக்லஸோட வீட்டுக்கு வரணும். அபிராமி அத்தை நிறைய முறை இந்தப் போட்டியில் ஜெயித்திருக்காங்க” என்று சொல்கிறாள்.
கார்த்திக் அபிராமியிடம் “என்ன நடந்தாலும் சரி, பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கியே ஆகணும்” என்று சொல்ல, எல்லோரும் பரமேஸ்வரி வீட்டுக்கு கிளம்பி வருகிறார்கள். சரவணன் எந்த தைரியத்துல இங்க வந்த என அபிராமியைத் தடுத்து நிறுத்தி சத்தம் போட, “நான் தான் உங்களை வர சொன்னேன் நீ எதுவும் பேசாத” என பரமேஸ்வரி பாட்டி என்ட்ரி கொடுக்கிறார்.
“என்னமோ நல்ல மருமகளை தேர்வு செய்வேன்னு சொல்லிட்டு போனியே என்ன ஆச்சு” என்று கேட்க, அபிராமி “என் மருமகளுக்கு என்ன குறைச்சல்? என் பையனுக்கு புடிச்ச மருமகள தான் நான் பார்த்திருக்கிறேன்” என முதல் முறையாக தீபாவுக்கு ஆதரவாகப் பேசுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.