ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எல்லோரும் கூட்டாக சேர்ந்து முதல் இரவு குறித்த அனுபவங்களை பகிரத் தொடங்கிய நிலையில், சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மீனாட்சி முதல் இரவில் நடந்த விஷயங்களைப் பகிர, அதன் பிறகு ஐஸ்வர்யா வாழ்க்கை என்றால் என்னன்னு தெரியுமா என்று தத்துவம் பேசத் தொடங்கியதும், “இப்படி எல்லாம் பேசினா மூட்டையை தூக்கிட்டு கிளம்பிடுவேன்” என மிரட்ட, அருண் காலில் விழுந்து இனி பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்கிறாள்.
அதனைத் தொடர்ந்து மீனாட்சி அபிராமி மற்றும் அருணாச்சலத்துக்கு எப்படி முதல் இரவு நடக்கும் என்பதை கற்பனை பண்ணி சொல்கிறேன் என ஒரு கதையை சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர்.
அதோட நிறுத்தாமல் கார்த்திக் மற்றும் தீபாவுக்கு இடையே முதல் இரவில் என்னவெல்லாம் நடக்கும் என ஒரு கதையை பேசுகிறாள். மறுபக்கம் நிஜத்தில் தீபா அத்தையோட ஆசிர்வாதத்தோடு தான் முதலிரவு நடக்கணும், அதுவரைக்கும் நமக்குள்ள எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்போடு முதல் இரவு அறைக்குள் நுழைய, கார்த்தியும் அதேபோல் தற்போது நமக்கும் எதுவும் வேண்டாம் முதலில் நன்றாக பேசி புரிந்து கொள்வோம் என சொல்ல தீபா சந்தோஷம் அடைகிறாள்.
மறுநாள் காலையில் தீபா உள்ளே போனது போலவே வெளியே வர, மீனாட்சி என்னாச்சு என்று விசாரிக்க, தீபா எங்களுக்கும் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அங்கு வரும் ஐஸ்வர்யா “எல்லா நடந்துடுச்சுனு ரொம்ப சந்தோஷப்படாத” என மிரட்டல் தோணியில் பேச தீபா பதில் ஏதும் பேசாமல் நிற்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.