தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் தீபா மட்டும் தனியாக மருவீட்டுக்கு கிளம்பிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்!
தர்மலிங்கமும் ஜானகியும் ஒரு காரில் வீட்டுக்கு கிளம்பிய நிலையில் மறுபக்கம் தீபா தனியாக இன்னொரு காரில் கிளம்பி செல்கிறாள், தனியாக செல்வதால் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற யோசனையுடன் சென்று கொண்டிருக்கிறாள்.
இங்கே வீட்டில் அபிராமியை பரிசோதனை செய்த டாக்டர் “உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை, வீட்டில் எதாவது சண்டை, ஆபிசில் எதாவது பிரச்சனையா நடந்ததா?” என்று கேட்க, ஐஸ்வர்யா அதற்கு “நான் மறுவீடு எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்” என ஆரம்பிக்க, மீனாட்சி “எதுக்கு எதுக்கும் முடிச்சு போடறீங்க” எனக் கேள்வி கேட்கிறாள். அதன் பிறகு டாக்டர் மருந்து மாத்திரை எழுதி கொடுத்து விட்டு கிளம்புகிறார்.
இங்கே தீபாவின் வீட்டில் எல்லாரும் குடும்பத்துடன் காத்துக் கொண்டிருக்க, இவள் மட்டும் தனியாக வந்து இறங்குவதைப் பார்த்து அனைவரும் மாப்பிள்ளை எங்கே என்று கேட்க, அவர் அவசர வேலையாக வெளியே கிளம்பி விட்டதாகவும், நாளைக்கு வந்து விடுவார் எனவும் சமாளிக்கிறாள்.
அதன் பிறகு தர்மலிங்கம் உறவினர்கள் எல்லாரையும் நாளைக்கு வருமாறு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். தீபா தனியாக அமர்ந்து வருத்தப்பட, ஜானகி அதைப் பார்த்து என்ன விஷயம் என்று விசாரிக்க, அபிராமி மயங்கி விழுந்த கதையை சொல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து வீட்டில் அபிராமி ஓரளவிற்கு குணமடைய, அருணாச்சலம் கார்த்தியை மறுவீடு அனுப்புவது பற்றி பேசுகிறார். அபிராமி தனக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்கிறாள், ஆனால் அருணாச்சலம் “உங்க அப்பாவே சொல்லிட்டாரு, இப்போ நீ இப்படி சொன்னா எப்படி” என்று பேசி சம்மதிக்க வைக்க. அபிராமி அனைவர் முன்னிலையிலும் கார்த்தியை கிளம்பச் சொல்கிறாள்.
கார்த்தி கிளம்பத் தயாராக, “இவனை போக விடக்கூடாது” என பாலில் பேதி மாத்திரை கலந்து கொடுக்க திட்டம் போடுகிறாள் ஐஸ்வர்யா. இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.