விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய எபிசோடில் பழனிசாமியிடம் கோபி சண்டை போட்டதால் கோபமடைந்த பாக்கியா கோபியை நன்றாக கேள்வி கேட்பதற்காக காத்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் "ஏய் பாக்கியலட்சுமி!" என அதட்டலாக கூற பாக்கியாவும் "ஏய் நிறுத்துங்க. உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க. நான் யார்கிட்ட பேசணும் பேசக்கூடாது என நீங்க சொல்ல கூடாது. உங்களுக்கு மேல எனக்கு கோபம் வரும். உங்க வேலையை பாத்துகிட்டு போங்க. இதே மாதிரி இனிமேல் பண்ணிட்டு இருந்தீங்கனா நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது" என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள் பாக்கியா.
இதை பார்த்து கொண்டு இருந்த ராதிகா, "செல்வி வந்திருக்கா என்று சொன்னதும் பாக்கியாவ பார்க்க தான் ஆசையா ஓடி வந்தீங்களா கோபி. அவங்க யாரோட வந்த உங்களுக்கு என்ன? இதே மாதிரி பண்ணிட்டு இருந்தீங்கனா கல்லை எடுத்து உங்க தலை மேல போட்டுடுவேன்" என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்று விடுகிறாள் ராதிகா
மறுநாள் காலை சமைக்கும் இடத்தில் அனைத்து வேலைகளும் சரியாக நடக்கிறதா என்பதை பார்த்து அவரவருக்கு வேலையை பிரித்து கொடுத்து கொண்டு இருக்கிறாள் பாக்கியா. அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி வர "ஏதாவது உதவி செய்ய வேண்டுமா மேடம்?" என கேட்கிறார். அப்போது கேசரியை சுவைபார்க்க எடுத்து வரும்போது அதை சுவைத்து பார்த்து அருமையாக இருக்கிறது என்கிறார் பழனிச்சாமி. அவரிடம் பாக்கியா சார் "ஒரு 20 நிமிடத்திற்கு பிறகு பந்தியை போட்டால் சரியாக இருக்கும் அதற்குள் நாங்கள் ரெடி செய்துவிடுவோம்" என்கிறாள். "சரி அப்போ நான் அங்க போய் எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கிறேன்" என பழனிச்சாமி சென்று விடுகிறார்.
ராதிகாவும் கோபியும் வர ராதிகாவின் உறவினர் அவர்களை சுதாகரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் தான் ராதிகாவின் கணவர் கோபி என அறிமுகப்படுத்தியதும் ஷாக்கான சுதாகர் குழம்பி போய் சரி நான் இதோ வருகிறேன் என அங்கிருந்து சென்று விடுகிறார்.
ஜூஸ் பரிமாறும் பாக்கியாவை பார்த்த ராதிகா "இதுக்கு தான் மேடம் இங்க வந்து இருக்காங்களா. எங்க போனாலும் எனக்கு காபி, ஜூஸ் கொடுக்க வந்துடுவாங்க" என கிண்டல் செய்கிறாள். எனக்கு ஆப்பிள் ஜூஸ் வேண்டுமென கேட்க பாக்கியா "இல்ல மேடம் இதுதான் மெனுல கொடுத்தாங்க" என சொல்கிறாள். ராதிகாவிடம் பாக்கியா அசிங்கப்படுவதை பார்த்த பழனிச்சாமி அங்கு வந்து நான் பரிமாறுகிறேன் என கூறி ட்ரேயை வாங்கிக் கொள்கிறார். அதை பார்த்த சுதாகர் "இதை நீங்க செய்ய கூடாதா?" என பாக்கியாவை கேட்கிறார். இல்ல சார் அவர் தான் சொன்னா கேட்காம என்கிட்டே இருந்து வாங்கிக்கொண்டார் என்கிறாள் பாக்கியா.
சுதாகர், கோபி மற்றும் ராதிகாவின் முன்னிலையில் பாக்கியாவின் உணவை ஆஹா ஓஹோ என பாராட்ட அவர்கள் இருவரும் கடுப்பாகிறார்கள். மறுநாள் காலை காபியை ராதிகா மற்றும் கோபிக்கு பரிமாற அதன் வாசனையை ரசித்த கோபியை பார்த்து டென்ஷனாகிறாள் ராதிகா. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.