ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த தர்மலிங்கத்தின் மீது ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் மேலே இருந்து பெயிண்டை கொட்டி அவமானப்படுத்த, கார்த்திக் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கோர்ட் சூட் போட வைத்து டிப் டாப்பாக அழைத்து வருகிறாள். அதன் பின் எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். தீபா கார்த்தியின் செயலைக் கண்டு சந்தோஷமடைகிறாள். 


அடுத்ததாக ஐஸ்வர்யா நட்சத்திராவிடம், “கார்த்தி மனசில் இடம் பிடிக்க நீ எதையாவது பண்ணு” என்று சொல்கிறாள், மேலும் “நீ கரண்ட் ஷாக் அடித்த மாதிரி நடி, கார்த்தி உனக்கு உதவ வந்து செயற்கை சுவாசம் கொடுப்பான், அதன் மூலம் உங்களுக்கு நெருக்கம் உருவாகும்” என்று ஐடியா கொடுக்கிறாள். 


அதனைத் தொடர்ந்து நட்சத்திராவும் அதே போல் நடிக்க, ஐஸ்வர்யா கார்த்தி கார்த்தி என்று கத்த அவனும் வெளியே வருகிறான். “நட்சத்திராவுக்கு ஷாக் அடிச்சிட்டு விழுந்துட்டா.. அவளை காப்பாற்று செயற்கை சுவாசம் கொடு” என்று சொல்ல அவன் தயங்கி நிற்கிறான். 




அந்த சமயம் பார்த்து அங்கு வரும் தீபா என்கிட்டே இதுக்கெல்லாம் வைத்தியம் இருக்கு என்று சொல்லி முள்ளை முள்ளால் எடுப்பது போல, கரண்ட் ஷாக்கை கரண்ட் ஷாக் வைத்து தான் சரி செய்ய வேண்டும் என்று சொல்ல, அப்போது மீனாட்சியும் வந்து விடுகிறாள். இருவரும் சேர்ந்து நட்சத்திராவுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க ஏற்பாடு செய்ய, அவளும் உடனடியாக எழுந்துட்டா ட்ராமா என்று தெரிந்து விடும் என்பதால் மயங்கியபடியே நடிக்கிறாள். 


அடுத்து தீபா அவளுக்கு அடுத்தடுத்து கரண்ட் ஷாக் கொடுக்க ஒரு கட்டத்தில் எழுந்து கொள்கிறாள். பிறகு தீபா , “எதை வேணும்னாலும் விட்டு தருவேன், ஆனால் கார்த்திக் சாரை மட்டும் விட்டுத் தரமாட்டேன்” என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில், இன்றைய கார்த்திகை தீபல் எபிசோட் நிறைவடைகிறது.