தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் கார்த்திக்கு போன் செய்து பல்லவியை வைத்து “ஒரு பல்லவியை கூட ரெடி பண்ண முடியல போல” என்று பேச, அதற்கு கார்த்திக், சொன்ன தேதிக்குள் பல்லவியை வைத்து பாடலை வெளியிடுவேன் என சவால் விட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, கார்த்திக் பல்லவிக்கு போன் செய்ய, தீபா போனை எடுத்து பல்லவி போல பேசுகிறாள். “ஏன் இப்படி பண்ணீங்க” என்று கோபப்பட, “அதெல்லாம் ரூபஸ்ரீ வேலை சார், உங்க கஷ்டம் எனக்கு புரியது, நான் கண்டிப்பா உங்களுக்காக பாடி கொடுக்கிறேன்” என்று வாக்கு கொடுக்க, கார்த்திக் “நீங்க சொன்ன வார்த்தையை காப்பாற்றுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு” என போனை வைக்கிறான். 


உடனே தீபா எப்படி பாடுவது என்று யோசிக்க, அங்கு வரும் மீனாட்சி “நீ தான் பல்லவி என்ற உண்மையை சொல்லிடு, எல்லா பிரச்னையும் சரியாகிடும்” என்று சொல்ல, தீபா தயக்கத்தோடு நிற்கிறாள். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஆபிஸ் வரும் தீபா கார்த்திக்கிடம் நாம் தான் பல்லவி என்று சொல்லி விடலாம் என்று முடிவெடுக்கிறாள். 


உண்மையை சொல்ல வரும் நேரத்தில் ஆபிஸில் வேலை செய்யும் பெண் பொய் சொன்ன காரணத்தினால் கார்த்திக் கோபப்பட, தீபா நம்ம விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயத்தில் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எபிசோட் நிறைவடைகிறது.