சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் எஸ்.கே.ஆர் வீட்டுக்கு குணசேகரன் மிரட்ட வந்த சமயத்தில் ஆதிரையும் அங்கு வந்து அருண் விபத்துக்கும், அப்பத்தாவின் சாவுக்கும் காரணம் குணசேகரன் தான் என்ற உண்மையை சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஆதிரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தது பற்றி சொல்ல, நீதிபதி ஆதிரையை நீதிமன்றத்தில் நியாயம் கேட்கச் சொல்கிறார். வலுக்கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் உங்கள் அனைவருக்கும் தண்டனை உண்டு என குணசேகரனிடம் சொல்ல, அவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு அனைவரும் ஆதிரையை ஒழித்து விட்டு வீட்டுக்கு வருகிறார்கள்.
தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறேன் என குணசேகரன் சொன்னதால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி "நீங்க வீம்புக்கு இதெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கீங்க" என சொல்ல "ஆமாடி வீம்புக்கு தான் பண்ணறேண்" என குணசேகரன் சொல்ல அவர் பேசுவதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
தர்ஷினி இது குறித்து பேசுகையில் "அவர் அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது மா" என சமாதானம் செய்கிறாள் ஜனனி. "செய்யமுடியாது என நாம தானே சித்தி தனியா பேசிகிட்டு இருக்கோம். ஆனா அவருதான் ஜெயிக்கிறார்" என தர்ஷினி சொல்ல அனைவரும் அமைதியாகி விடுகிறார்கள்.
"நாங்க எஸ்.கே.ஆர் வீட்டுக்கு போனதும் எங்களோட மூக்கை உடைக்க பின்னாடியே பெட்டியோட அனுப்பிவிட்டது நீங்க தானே" என வாய்க்கு வந்தபடி எல்லாம் ஈஸ்வரியிடம் குணசேகரன் எகிற அதை கேட்ட ஜனனியும் தர்ஷினியும் வருத்தப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.