தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரூபஸ்ரீ தீபாவை ஒரு இடத்திற்கு வரவைத்து பிறகு கார்த்திக்கிடம் ஒரு பெண்ணை பல்லவியாக அறிமுகம் செய்து வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது ரூபஸ்ரீ தீபாவிடம் இப்ப போய் நீதான் பல்லவின்னு சொல்லு பாக்கலாம் என்று சொல்ல, தீபா கோபமாகவும் வேகவேகமாகவும் கார்த்திக்கிடம் வந்து “இந்தப் பொண்ணு சொல்றது பொய். நான்தான் உண்மையான பல்லவி” என்று உண்மையை உடைக்க, கார்த்திக் “இவ்வளவு நாளா ஏன் இத சொல்லல நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க” என்று அவளிடம் கோபப்படுகிறான். 


பிறகு உண்மை கார்த்திக்கு தெரிந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை தீபா நினைத்துப் பார்த்தது தெரிய வருகிறது. மேலும் கார்த்திக் கூட நான் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைத்து பார்த்து உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். ரூபஸ்ரீயிடம் நீ உண்மைய சொல்லாததே நல்லது எனவும் சொல்கிறாள். 


இதே இடத்தில் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ஒளிந்து இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க, இந்த பல்லவியை கொண்டு வந்தது அவளுடைய திட்டம் தான் எனத் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.