ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் துரை வீட்டிற்கு சென்று அவனுக்கு அறிவுரை சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திக் சொன்ன அறிவுரையால் மனம் திருந்தும் துரை, "நட்சத்திரா தான் என்னை பெயிலில் வெளியே எடுத்தா, அவளோட இன்னும் யாரோ ஒருவர் சேர்ந்து தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க" என்று சொல்கிறான். கார்த்திக் “இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்லி ஹாஸ்பிடலில் கிளம்பி வருகிறான்.
அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் போய் கொண்டிருக்க கார்த்திக், தீபா, அருண், அருணாச்சலம், நட்சித்திரா, ஐஸ்வர்யா என எல்லாரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். கொஞ்ச நேரத்தில் அபிராமி கண் விழிக்க, எல்லாரும் அவரை பார்க்க போன போது “கார்த்திக் உங்களுக்கு ஒன்னும் இல்ல, யாரோ உங்களை அடைத்து வைத்திருந்தாங்க” என்று சொல்கிறான்.
அபிராமி யார் என்று கேட்க, கார்த்திக் துரை என்று உண்மையை சொல்லாமல் யாராவது பிசினஸ் எதிரியாக இருக்கும் என்று சொல்லி சமாளிக்க, தீபா குழப்பம் அடைகிறாள், அதே போல் துரை கடத்திய விஷயம் அறிந்த நட்சத்திராவும் “எதுக்கு மாத்தி சொல்லுறான்” என அதிர்ச்சி அடைகின்றனர்.
இருவரும் உடனே துரைக்கு போன் செய்து “கார்த்திக் பிசினஸ் எதிரிகள் கடத்தியதா சொல்றான், என்னாச்சு ” என்று கேட்க துரை கார்த்திக் சொன்ன விஷயத்தால் “ஆமாம், கார்த்திக் வரும் போது நான் எஸ்கேப் ஆகிட்டேன், அவன் என்னை பார்க்கல, இப்போ நான் தலைமறைவாக இருக்கேன்” என்று சொல்ல இவர்களும் அதனை நம்பி விடுகின்றனர்.
அடுத்ததாக தீபா கார்த்திக் தனியாக இருக்கும் போது “ஏன் மாத்தி சொன்னீங்க” என்று கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.