Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொலை செய்ய சதி! காப்பாற்றப்போவது யார்? கார்த்திகை தீபத்தில் இன்று

ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். புதிய திரைக்கதையுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு வருகிறது கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை சாமுண்டீஸ்வரியை ஒருவன் கத்தியால் குத்த வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

சாமுண்டீஸ்வரியை காப்பாற்றும் கார்த்திக்:

அதாவது சிவனாண்டி ஆட்கள் சாமுண்டீஸ்வரியை குத்த வர சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே நடக்கும் தகராறில் துப்பாக்கியை தள்ளிவிட்டு சாமுண்டீஸ்வரியை குத்த வருகின்றனர்.  இந்த சமயத்தில் கார்த்திக் இடையில் புகுந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறான். ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து சிவனாண்டி கார்த்தியை சந்திக்கிறான். தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு கூறுகிறான். ஆனால், நாயகன் கார்த்தியோ தன்னால் முடியாது என மறுக்கிறான். பிறகு சந்திரகலாயும், சிவனாண்டியும் சேர்ந்து திட்டம் ஒன்றை போடுகின்றனர். திடீரென சாமுண்டீஸ்வரி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அப்போது, சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்குள் ரவுடிகளை இறக்கி சாமுண்டீஸ்வரியை கத்தியால் குத்த சொல்கிறான் சிவனாண்டி. ‌ ‌இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்று இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola