குக் வித் கோமாளி நான்காவது சீசனில் பங்குபெற்ற ஆண்ட்ரியன் கடந்த எபிசோடில் எலிமினேட் செய்யப்பட்டார்.


பிக்பாஸ் வரிசையில் மக்களிடம் பேராதரவை பெற்று டி.ஆர்.பி பட்டியலின் உச்சியில் இருக்கும் குக் வித் கோமாளி மக்களின் மனதில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. சமையல் சமையல் வித் வெங்கடேஷ் பட், கிச்சன் சூப்பர் ஸ்டார் வரிசையில் ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டில் ஒளிபரப்பாக தொடங்கியது. 


சமையலில் அசத்தும் ஷிவாங்கி




நகைச்சுவை நிறைந்த இந்த சமையல் நிகழ்ச்சி செம ஹிட்டாகியது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் நடந்தது. இப்போது நான்காவது சீசனில் 
சுனிதா, குரேஷி, புகழ், போன்ற பழைய கோமாளிகள் பங்கேற்க புதிதாக மோனிஷா, ஜி.பி முத்து ஆகியோர் இக்குடும்பத்தில் இணைந்தனர். கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்த ஷிவாங்கி இம்முறை குக்காக களமிறங்கியது இந்த சீசனின் ஹைலைட்.கடந்த வாரத்தில் டாப் 5க்கான போட்டி நடைப்பெற்றது. சூப்பராக சமைத்து அசால்ட் செய்து முதல் போட்டியாளராக டாப் 5க்குள் நுழைந்தார் ஷிவாங்கி.


எலிமினேஷன் சுற்று


ஜூன் 10 ஆம் தேதியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த கிரண் அட்வாண்டேஜ் டாஸ்க்கை வென்றார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்ற மணிமேகலையும் ரக்‌ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின் ஜூன் 11 ஆம் தேதியில், போட்டியாளருக்கான மெயின் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எலிமினேஷன் சுற்று என்பதால், ஒன்றுடன் ஒன்று ஒற்றுப்போகாத காய்கறிகளின் காம்போவை நடுவர்கள் கொடுத்தனர்.


போட்டியை விட்டு வெளியேற்றப்பட்ட ஆண்ட்ரியன்


அப்போது , ஷிவாங்கி சொன்னதை கேட்ட ஆண்டிரியன் மணிமேகலையிடம் இருந்த கூடையை தேர்வு செய்தார். அதில் கருணை கிழங்கும் கொத்தவரங்காயும் இருந்தது.  ‘குக் வித் கோமாளியின் சூனிய பொம்மையே மணிமேகலைதான், மணி பல நபர்களை எலிமினேட் செய்துள்ளார். அதனால் ஜாக்கிரதையாக இருங்க ஆண்ட்ரியன்’ என பலரும் விளையாட்டாக கேலி செய்தனர். 




சூப்பராக சமைத்த ஷ்ருஷ்டி, டாப் 5க்குள் இரண்டாவது போட்டியாளராக நுழைந்தார். பின் மைம் கோபி, விச்சித்ரா ஆகியோரும் டாப் 5 க்குள் நுழைந்தனர். சுமாராக சமைத்த கிரணும் ஆண்ட்ரியனும் எலிமினேஷன் ரவுண்டுக்கு தள்ளப்பட்டனர்.  


பலாக்காய் அல்லது பலாப்பழத்தை வைத்து சமைக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது. அந்த ரவுண்டில் மீண்டும் சொதப்பிய ஆண்ட்ரியன் எலிமினேட் செய்யப்பட்டார். எப்போதும் சூப்பராக சமைத்து எலிமினேஷன் ரவுண்ட் பக்கமே செல்லாத 
ஆண்ட்ரியனின் காட்டில் நேற்று மழை பெய்யவில்லை என்பதே நிதர்சனம்.


குற்ற உணர்ச்சியில் மணிமேகலை




அழுது கொண்டிருந்த ஆண்ட்ரியனிடம், தர்ம சங்கடத்தில் சிக்கிய ஷிவாங்கி மன்னிப்பு கேட்டார். அதற்கு ஆண்டிரியன், “நீ வேற” என பெருந்தன்மையுடன் கூறினார். இதனால் குக் வித் கோமாளியின் போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்கள் என அனைவரும் வருத்ததுடன் அவரை வழி அனுப்பி வைத்தனர். தன்னால்தான் அவர் எலிமினேட் ஆகிவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியும் மணிமேகலையின் முகத்தை வாட வைத்தது. 


வெளிநாட்டவராக இருந்தாலும் ஆண்ட்ரியன் பேசும் க்யூட்டான தமிழையும், அவரது அசத்தலான சமையலையும் மிஸ் செய்ய போகும் அவரின் ரசிகர்கள் வைல்ட் கார்ட் சுற்றுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.