பிரபல சீரியல் நடிகை தீபா பாபு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 


அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தீபா. இவருக்கு கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும்  பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவுடன் திருமணம் நடைபெற்றது. 


முதல் கணவரை பிரிந்த தீபா, சிறு வயது மகன் இருந்த இரண்டாவது திருமணம் செய்தது மிகப்பெரிய பேசுபொருளாக சின்னத்திரை வட்டாரத்தில் இருந்தது. ஆனால் அவர் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய முதல் திருமணம் குறித்த நிகழ்வுகளை தெரிவித்துள்ளார். 


நான் 14 வயதிலேயே நடிக்க வந்துட்டேன். ரொம்ப வருஷமா கலையுலகில் இருக்கிறதால் எனக்கு எதுவும் பெரியதாக தெரியவில்லை. நான் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபு ஹீரோவாக நடிக்கவிருந்த ‘வசந்தம் வந்தாச்சு’ படத்தின் தயாரிப்பாளர் அங்கிருந்த கடைக்கு வந்தப்ப என்னை பார்த்தார். இந்த பொண்ணு ரொம்ப துறுதுறுன்னு இருக்கா.  நடிக்க வைப்பாங்களா? என கேட்டுருக்காரு. அந்த கடைக்காரர் எங்கம்மாவிடம் விஷயத்தை சொல்ல, அவருக்கு விருப்பம் இருந்தது. 


நான் சீரியலில் நடிக்க வந்தபோது பாசிட்டிவ், நெகட்டிவ் என இருபக்கமும் விமர்சனங்கள் நாங்கள் இருந்த ஏரியாவில் உள்ள மக்களிடமிருந்து வந்தது. எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. ரொம்ப தப்பான வயசுல, தப்பான ஆளை, தப்பான நேரத்துல கல்யாணம் பண்ணிட்டேன். என்னோட விருப்பத்தின் பேரில் வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்துக்கு மாறாக என் கல்யாணம் நடந்தது. அந்த தப்புல கடவுள் கொடுத்த பொக்கிஷம் தான் என்னோட பையன். 


கல்யாணம் ஆன ஒரு வருசத்துல பையன் பொறந்துட்டான். ஆனால் அந்த நேரம் கூட கலையுலகம் என்னை கைவிடவில்லை. அந்த நேரத்தில் சன் டிவியில் அத்திப்பூக்கள் சீரியலில் நடித்து வந்தேன். அதில் தோழி கேரக்டரில் நடித்தேன். அதனால் அதில் என் பையனை நடிக்க வச்சேன். அப்ப குழந்தை பிறந்து 2 மாதங்கள் தான் ஆனது. அவனது பணத்தில் தான் நாங்கள் சாப்பிடும் நிலை இருந்தது. 






நான் கல்யாணம் ஆன 3வது நாளே எடுத்த முடிவு தப்பு என தெரிய வந்தது. என்னை அடிச்சி, தாலியை அறுத்து போடின்னு கணவர் துரத்தி விட்டாரு. ஆனால் வந்துட்டேன், வாழ்ந்துட்டேன், திரும்ப போய் யாரையும் எதிர்நோக்கும் தைரியம் எனக்கு இல்ல. நான் போகமாட்டேன் என இருந்தேன். அப்புறம் நான் கர்ப்பமாக இருந்ததால் என் அப்பா, அம்மா எதுவும் சொல்ல முடியாமல், இதுதான் விதி என்றால் இருக்கட்டும் என சொல்லி விட்டார்கள். இப்போது நான் உயிரோட இருக்க காரணம் என் பையன் தான்” என தீபா பாபு தெரிவித்துள்ளார்.