சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (மார்ச் 13) எபிசோடில் ஜீவானந்தத்தை வீர சங்கிலியின் அடியாள் கத்தியால் குத்தி விடுகிறான். அதைப் பார்த்த தர்ஷினி அதிர்ச்சி அடைகிறாள். கத்தி குத்துப்பட்டும், ஜீவானந்தம் அந்த ரவுடிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட விடுகிறார். மயங்கி விழுந்த தர்ஷினியை மிகவும் சிரமப்பட்டு காடு வழியாக தூக்கி செல்கிறார். ஒரு கட்டத்தில் முடியாமல் கீழே படுக்க வைக்கிறார். தர்ஷினி மயக்கத்திலேயே தண்ணீர் கேட்க, ஜீவானந்தம் தண்ணீர் எடுக்கச் சென்ற இடத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்.
அதற்குள் ஸ்பெஷல் போலீஸ் டீம் அங்கே வந்து விடுகிறது. தர்ஷினியை வேகவேகமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொல்கிறார்கள். குணசேகரனுக்கு தர்ஷினி கிடைத்த தகவல் தெரியவருகிறது. அவளை மருத்துவமனையில் சேர்த்து இருப்பது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன். வீட்டில் உள்ள அனைவரும் தர்ஷினி கிடைத்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஞானமும் கதிரும் குணசேகரனுடன் கிளம்ப, அவர்கள் இருவரையும் அசிங்கப்படுத்தி யாரும் என்னுடைய மகளை பார்க்க வரக்கூடாது என அதட்டிவிட்டு போகிறார் குணசேகரன்.
ஹாஸ்பிடலுக்கு வந்த குணசேகரன் தர்ஷினியைப் பற்றி விசாரிக்கிறார். மகளின் இந்த நிலைக்கு காரணமான ஜீவானந்தத்தை பிடித்து விட்டாச்சா எனக் கேட்க, அவர் தப்பித்து போனது பற்றி தெரிந்து ஆவேசப்படுகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தப் போகிறார்கள் என ஜனனிக்கு வக்கீல் மூலம் போன் வருகிறது. உடனே ஜனனியும் சக்தியும் ஈஸ்வரியைப் பார்த்து தர்ஷினி கிடைத்த தகவலைப் பற்றி செல்வதற்காக கிளம்ப ரேணுகாவும் நந்தினியும் நாங்களும் வருகிறோம் என சொல்லி அவர்களுடன் செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினியை ட்ரீட்மென்ட் செய்யும் இடத்திற்கு சென்று பார்க்கிறார் குணசேகரன். தர்ஷினி கண்கள் கூட திறக்க முடியாமல் "அப்பா என்னை காப்பாத்துங்க அப்பா... காப்பாத்துங்க அப்பா" என அலறுகிறாள். அதைப் பார்த்த குணசேகரன் "அப்பா வந்துட்டேன்மா, உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லமா" என சொல்கிறார். அதைத் தள்ளி நின்று பார்க்கும் ஞானமும் கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஜனனி, நந்தினி, ரேணுகா மற்றும் சக்தி, ஈஸ்வரியை சென்று பார்க்கிறார்கள். ஜீவானந்தம் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிந்ததும் "ஒரு வேலை அவரை ஏதாவது பண்ணிட்டு வந்து போலீஸ் இப்படி சொல்றங்களா?" என சந்தேகப்பட்டு கேட்கிறாள் ஈஸ்வரி. கான்ஸ்டபிள் ஜீவானந்தத்தை சுட்டு பிடிக்க போலீஸ் ஆர்டர் வாங்கி இருந்ததை பற்றி அவர்களிடம் சொல்லவும் அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
கதிரும் ஞானமும் தர்ஷினியை பார்க்க முயற்சி செய்ய, கரிகாலன் அவர்களைத் தடுத்து "கிளம்புயா கிளம்பு... நீ வீட்ல போய் பொண்டாட்டி முந்தானையை முடிச்சுக்கோ" என ஞானத்தை அவமானப்படுத்தி பேச, கடுப்பான கதிர் அவன் சட்டையை பிடித்து அடிக்கிறன். போலீஸ் அவர்களை தடுத்து விடுகிறார்கள். குணசேகரன் அவர்கள் இருவரையும் ஹாஸ்பிடலில் இருந்து விரட்டி அடிக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.