Idhayam Serial: கண்ணீருடன் பாரதி: சாரதாவுக்கு ஷாக் கொடுத்த ஜோசியர்: இதயம் சீரியல் அப்டேட்! 

ஜோசியர் “இந்தப் பையனுக்கு இந்த பொண்ணு தான் சரியான ஆளு, பொருத்தம் எல்லாம் அப்படி இருக்கு” என்று பாராட்டி பேச, அறிவு மற்றும் சாரதா ஷாக்காக ஆதி சந்தோசப்படுகிறான்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி ஜாதகம் பார்க்கலாம் என்று மாமியாரிடம் சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, சாரதா வீட்டில் ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடரை வரவைத்து இருக்கின்றனர். ஆதி வெளியில் கிளம்ப சாரதா அவனையும் கூப்பிட்டு உட்கார வைக்கிறாள். ஜோசியர் ஜாதகத்தை பார்த்து என்ன சொல்ல போகிறார் என்ற பில்டப் எகிற, அறிவு ஏற்கெனவே அவரை சந்தித்து ஜாதகம் சரியில்லை என்று தான் சொல்லணும் என்று பணம் கொடுத்த விஷயம் ரிவீலாகிறது. 

ஆனால் ஜோசியர் “இந்தப் பையனுக்கு இந்த பொண்ணு தான் சரியான ஆளு, பொருத்தம் எல்லாம் அப்படி இருக்கு” என்று பாராட்டி பேச, அறிவு மற்றும் சாரதா ஷாக்காக ஆதி சந்தோசப்படுகிறான். அப்படியே மறுபக்கம் மரகதம் மற்றும் பாரதியும் ஜோசியரை பார்க்க வந்திருக்கின்றனர். 

இங்கே ஆதி வீட்டில் ஜோசியர் வெளியே கிளம்பியதும் பின்னாடியே வரும் அறிவு அவரை பிடித்து திட்டிக் கொண்டிருக்க, ஆதி என்ட்ரி கொடுத்து அறிவை பிடித்து திட்ட ஸ்வேதா அப்பா அறிவை திட்ட, நல்லவள் போல் டிராமா போடுகிறாள். மறுபக்கம் ஜோசியர்  “பாரதியிடம் இந்த கல்யாணம் நடக்கக் கூடாது, அப்படி நடந்தா அந்த பையன் உயிருக்கே ஆபத்து” என்று சொல்லி பாரதியே தன்னை ராசி கெட்டவள் என நம்பத் தொடங்குகிறாள். 

பாரதி வீட்டிற்கு வர மரகதம் “ஜோசியர் சொன்னதையெல்லாம் மனசுல வசிக்காத, ஆதிக்கு ஒன்னும் ஆகாது” என்று வேஷம் போடுகிறாள். அங்கே ஜோசியர் ஆதியிடம் “நீங்க பணம் கொடுத்துக்காக இந்த ஜாதகம் நல்லா இருக்குனு சொல்லல, உண்மையாக பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு” என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement