எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் இருந்து கட்டத்தை அடைந்து விட்டது. இதுவரையில் ஆணாதிக்கவாதியாக பெண்களை அடிமைப்படுத்தி வந்த குணசேகரன் சமீபத்தில் கொலை, கடத்தல் என பல சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்து வந்த நிலையத்தில் அவை அனைத்தும் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். 


 




ஜெயிலுக்கு குணசேகரனை அழைத்து செல்லும் போது அவர் தம்பிகளையும்  மகன் தர்ஷனையும் கட்டி பிடித்து கொண்டு அழுகிறார். எனக்கு ஒன்னு என்றவுடன் நீங்கள் வந்தீங்க இல்ல அதுலேயே நான் ஜெயிச்சுட்டேன். அப்பத்தாவிடம் சென்று நீ படிச்சவ ஜெயிச்சுட்ட ஆனா நான் உழைச்சவேன் இப்போ ஏமாந்து போயிட்டேன் என வருத்தப்படுகிறார். பெண்கள் அனைவரிடமும் படித்த உங்களை இதுவரையில் நான் அடிமைகளாக முடக்கி போட்டு வைத்து இருந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். இனி உங்களை தடுக்க நான் இல்லை. உங்களின் விருப்பம் போல நீங்கள் இருக்கலாம். ஆனால் இன்று என்னை ஜெயித்துவிடீர்கள். ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என்னை போல ஒரு குணசேகரன் இருப்பான். உங்களின் நல்லதுக்காக சொல்கிறேன் என அவர்களிடம் சொல்கிறார். 


 


அம்மாவை நான் அடிமையாக வைத்து இருக்கிறேன் என்பது கூட தெரியாமல் மூத்தவன் மூத்தவன் என என் மீது உயிரையே வைத்து இருந்துது. இப்போ கூட தான் வீட்டுக்கு வருவேன் என சமைத்து வைத்து காத்திருக்கும். அது கிட்ட சொல்லிடுங்க இனி நான் வரமாட்டேன்னு என்கிறார். 


 



அப்பத்தா ஆதிரைக்கும் தர்ஷினிக்கும் அவர்களின் கனவை நோக்கி துணிச்சலாக செயல்பட ஊக்கமளிக்கிறார். நான்கு மருமகள்களிடமும் தனியாக பேசவேண்டும் என அழைத்து சென்று பேசுகிறார். இந்த ஒரு குணசேகரனை போல பலரை நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்வீர்கள். அவர்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உங்களின் மூலம் நான் என்னுடைய இலட்சியத்தை அடைய விரும்புகிறேன். 


 


'கிரீடம்' அறக்கட்டளையை நீங்கள் நால்வரும் சேர்ந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். யார் கையையும் உதவிக்காக எதிர்பார்க்காமல் நீக்க மற்றவர்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும். இனி எந்த தடையும்  இல்லை நீங்கள் முழு சுதந்திரத்துடன் இனி செயல்படலாம். எதிர்நீச்சல் போட்டு உங்கள் கனவு லட்சியங்களை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். அதை பார்க்க நானிருப்பேன். வெற்றி நடைபோடுங்கள் என பெண்களை வழிநடத்தி வைக்கிறார் அப்பத்தா. அத்துடன் எதிர்நீச்சல் 'சுபம்' கார்டுடன் முடிவுக்கு வந்தது.  


 


2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த திருச்செல்வத்தின் 'எதிர்நீச்சல்' தொடர் தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக மக்களுக்கு ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்து. நடிகர் மாரிமுத்துவின் மறைவு தான் இந்த சீரியலுக்கு ஏற்பட்ட மிக பெரிய இழப்பு. என்ன தான் கொடுமைக்காரனாக இருந்தாலும் இறுதி காட்சியில் 'தங்கம் தங்கம்' என்ற பின்னணி இசையுடன் உருக்கமாக குணசேகரன் பேசிய வசனங்கள் பார்வையாளர்களை கலங்க வைத்து. இன்றுடன் இரவு 9 மணிக்கு ரசிகர்கள் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரை மிகவும் மிஸ் செய்வார்கள்.