சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 20) எபிசோடில் ஜனனி ஆபீஸில் வி.கே அடிக்கும் கூத்து பற்றி சந்தோஷமாக சொல்லி சிரிக்க சக்தி கடுப்பாகி அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறான். ஜனனி சென்று என்ன நடந்தது என கேட்கிறாள்.
வி.கேவிடம் ஜனனி பேசுவதை பொஸஸிவ்வாக ஃபீல் செய்த சக்தி ஜனனியிடம் கோபித்து கொள்கிறான். அனைவரையும் அழைத்து ஜனனி இதை சொல்ல எல்லாரும் சக்தியை கிண்டல் செய்கிறார்கள். அப்படியே அவர்கள் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் நடக்கிறது.
அடுத்த நாள் அனைவரும் கோயிலுக்கு செல்ல தயாராகிறார்கள். விசாலாட்சி அம்மா அந்த பக்கம் வர ஞானம் வேலை செய்வதை பார்த்து கேலியாக பேசுகிறார். கரிகாலன் வந்து மேலும் கொஞ்சம் ஏத்தி விடுகிறான். "உங்க பேத்தி தானே அது. நல்ல நாள் அதுவுமா நல்லதா நாலு வார்த்தை சொல்ல கூடாதா?" என ரேணுகா கேட்க "எனக்கு எந்த பேத்தியும் கிடையாது" என விசாலாட்சி அம்மா மனசு கஷ்டப்படுவது போல பேசுகிறார்.
குணசேகரனிடம் சென்று "ஏன் நீங்களும் அப்பத்தாவும் எங்களை ஒதுக்குறீங்க. நாளைக்கு நான், தர்ஷினி அக்கா இல்லாட்டி ஐஸ்வர்யா அக்கா யாரையாவது தூக்கிகிட்டு போனா நீங்க பார்த்துகிட்டு சும்மா இருப்பீர்களா?" என தாரா கேட்கிறாள். "ஏய் சும்மா இரு அவரே ஆளை வைத்து செய்வார்" என்கிறாள் நந்தினி. அதை கேட்டதும் குணசேகரன் முகமே மாறிவிடுகிறது. இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கோயிலுக்கு செல்ல அனைவரும் தயாராக இருக்கிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்த வேன் வராததால் அனைவரும் டென்ஷனாக இருக்கிறார்கள். அப்போது அங்கே வந்த கரிகாலன் சக்தியிடம் வம்பு பண்ண "என்ன வேவு பார்க்க அனுப்புனரா உன்ன? காட்டுல வாங்குனது எல்லாம் மறந்து போச்சா" என மிரட்டுகிறான் சக்தி.
கோயிலில் செய்து வைத்த ஏற்பாடுகள் அனைத்தும் சொதப்பலாக நடக்கிறது. கோயில் பூசாரி கதிரிடம் ஏதோ சொல்ல கதிர் கடுப்பாகிறான். "திடீரென வந்து இப்படி சொன்ன எப்படி ஒத்துக்க முடியும். சொந்தகாரங்க எல்லாரும் வந்துட்டு இருக்காங்க" என பூசாரியை திட்டுகிறான். "செஞ்ச அத்தனை வேலையும் சொதப்பலா போச்சுன்னா யாரை தப்பு சொல்றது?" என மாமனாரிடம் கடுமையாக பேச "இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க. என்ன பண்ணனும்னு சொல்லுயா... உன்னோட காலில் விழாவா" என கதிர் காலில் நந்தினியின் அப்பா விழ போக அதை உறவுக்காரர்கள் பார்த்து விடுகிறார்கள். ஈஸ்வரியின் அப்பா தான் நந்தினியின் அப்பாவை தடுக்கிறார்.
மறுபக்கம் ஏற்பாடு செய்த வேன் வராததால் வீட்டில் இருக்கும் அனைவரும் லாரி ஒன்றில் ஏறி கோயிலுக்கு செல்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.