எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (மே 31) எபிசோடில் கரிகாலன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறான் கரிகாலன். அனைவரும் அவரின் பிறந்தநாளை மறந்துவிட கரிகாலன் மட்டும் ஞாபகத்தில் வைத்திருக்கிறான். அந்த நேரத்தில் கொன்றவை மற்றும் ஜனனி போலீசுடன் வந்து அப்பத்தாவை விஷம் வைத்து கொன்ற வழக்குக்காக அவரை கைது செய்வதாக சொல்லி அழைத்து செல்கிறார்கள். கரிகாலனும் அவனுடைய கூட்டாளியும் போலீஸ் வண்டி பின்னாடியே ஓடுகிறார்கள்.


 



விசாலாட்சி அம்மா கண்கலங்கி நிற்கிறார். வீட்டுக்குள் சென்று ஞானத்தையும் கதிரையும் பார்த்து "ரொம்ப சந்தோஷம். உங்களை வளர்த்துவிட்டவனை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். கையை கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்குறீங்க" என்கிறார். "நீ தானே இதை எல்லாம் பண்ண. உன்னோட பேச்சை கேட்டு தான் இவனுங்க இப்படி பண்றாங்க" என ஜனனியை திட்டுகிறார் விசாலாட்சி அம்மா.


"உங்க பிள்ளையை வளர்த்துவிட்ட அப்பத்தாவையே கொன்னு இருக்கார். சொந்த ரத்தத்தையே இப்படி கொலை செய்ய மனசு வருது. பெத்த பொண்ணை கடத்தி இருக்காரு. இரண்டு உயிரை எடுத்து இருக்காரு" என ஜனனி சொல்ல "எனக்கு தெரியும். வீர சங்கிலிகிட்ட அவர் பேசினதை நான் கேட்டேன்" என தர்ஷினி சொல்கிறாள்.


 




"அந்த ஆளு பண்ண எல்லா தப்புக்கும் நீயும் தானே உடந்தை. இப்போ பாத்துக்கிட்டு சும்மா இருக்க. நான் போய் அவரை வெளியில் எடுத்துட்டு வரேன்" என கரிகாலன் கதிரை பார்த்து சத்தம் போட விசாலாட்சி அம்மா "நானும் உன் கூட வரேன்" என்கிறார்."யாரும் போக தேவையில்லை. நானே போகிறேன்" என கதிர் கிளம்ப ஞானமும் அவனுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான். அதை பார்த்து பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம்.


அதை தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


போலீஸ் ஸ்டேஷன் சென்ற கதிர் கொன்றவையிடம் ஆவேசமாக பேசுகிறான். "எங்க அண்ணனை ஜெயில்ல அடைச்சுடுவீங்களா?" என நக்கலாக கேட்க "முட்டாளா நீ. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அடைச்சுடுவியா உடைச்சுடுவியான்னு பேசிகிட்டு இருக்க?" என போலீஸ் உயர் அதிகாரி கேட்கிறார்.


 




வீட்டில் விசாலாட்சி அம்மா தர்ஷினியிடம் "எல்லாத்துக்கும் காரணம் உன்னோட அம்மா தான்" என பழி சுமத்த "என்னோட அம்மாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள் தர்ஷினி. "கெட்டவங்க எப்போதும் ஜெயிச்சுகிட்டே இருக்க முடியாது. அடிவிழறப்போ பெருசா விழும்" என விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறாள் ஜனனி.


 





குணசேகரனை தேடி ஞானம், கதிர், கரிகாலன், தர்ஷன் என அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள். அங்கே அவர்களை பார்த்த குணசேகரன் "இன்னிக்கு அவள்களுக்கு முன்னாடி நான் தோத்துப் போயிட்டேன். ஒன்னு மட்டும் சொல்றேன் டா" என சொல்லி மீண்டும் ஏதோ ட்ராமா போடுகிறார். அதை கேட்டு தம்பிகள் கண்கலங்குகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.