சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியையும் தர்ஷனையும் காணவில்லை என பதற்றத்தில் இருக்கிறார்கள் ஜனனியும் சக்தியும். அந்த நேரத்தில் புதிய பைக்கில் அவர்கள் இறங்குவதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உடனே பிரச்சனை செய்த வந்துவிட்டார்கள் கதிரும் ஞானானும். "ஏன் இப்படி குடும்ப மானத்தை வாங்குறீர்கள்? எங்க அண்ணன் 13 வயசுல இருந்து கஷ்டப்பட்டு ஏங்க வளர்த்தார் ஆனா இந்த பையன் இப்படி பேசுறான்" என் ஞானம் சொன்னதும் "அவர் அப்பா செத்து கஷ்டப்படுத்துனாரு இவர் உயிரோட இருந்து கஷ்டப்படுத்துறாரு" என சொன்னதும் கதிர் தர்ஷனை ஓங்கி அறைந்து விடுகிறான். பெரிய கைகலப்பே நடக்கிறது. அனைவரும் சேர்ந்து தடுத்து விடுகிறார்கள்.
Ethirneechal : லெட்டர் எழுதி வைத்த குணசேகரன்... பேசாமல் வந்து போனவரை கூட இனிமேல் பார்க்க முடியாதே! எதிர்நீச்சல் ரசிகர்கள் வருத்தம்
லாவண்யா யுவராஜ் | 18 Sep 2023 07:12 PM (IST)
Ethirneechal Sep 18 promo : லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய குணசேகரன். உண்மையை அறிந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஷாக். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
எதிர்நீச்சல் செப்டம்பர் 18 எபிசோட்
அனைவரும் ஒன்றாக வீட்டின் டைனிங் டேபிள் அருகே இருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா சக்தியிடம் "டேய் சக்தி உங்க அண்ணனை பாத்தியா டா" என கேட்கிறார். "இல்லையே மா மேல நான் பாக்கலையே" என்கிறான்.
மாடிக்கு சென்ற ஞானம் மேஜையில் போனும் அது அடியில் ஒரு லெட்டரும் இருப்பதை பார்க்கிறான். அதை பார்த்து படித்துவிட்டு "என்ன அண்ணே இது... டேய் கதிர் வாடா டேய்" என அழைக்கிறான். ஞானம் அலறுவதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மாடிக்கு ஓடுகிறார்கள். சக்தி லெட்டரை வாங்கி படிக்க கதிர் அவனிடம் இருந்து புடுங்க முயற்சிக்கிறான். அவனை தள்ளி விட்டு சக்தி லெட்டரை படிக்கிறான். கதிர் அனைவரையும் பார்த்து கத்துகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
குணசேகரன் கதாபாத்திரமாக மறைந்த நடிகர் மாரிமுத்துவை நேற்று வரை வாய் பேசாமல் அமைதியாக வந்து போவது போல காட்டினார்கள். ஆனால் இனி நடிகர் மாரிமுத்துவை எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. அதே சமயத்தில் புதிய குணசேகரனாக யார் வர போகிறார் என்பது ஒரே சஸ்பென்சாகவே இருக்கிறது.
Published at: 18 Sep 2023 07:12 PM (IST)