சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர் ஒவ்வொரு நாளும் ஹைஸ்பீடில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்தனை நாட்களாக வீட்டுப் பெண்களை சமையலறையில் அடக்கி வைத்திருந்த ஆண்கள் அனைவரும் இப்போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க, எதிர்நீச்சல் வீட்டு பெண்கள் புது உத்வேகத்துடன் மனதில் தைரியத்தை மட்டும் வைத்து கொண்டு களம் இறங்கியுள்ளனர். 



தர்ஷினியின் கடத்தல் கதைதான் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அவளை தேடும் பணியில் பெண்களும், உடன் ஒரே ஆண் துணையாக சக்தியும் வலைவீசி தர்ஷினியை தேடி வருகிறார்கள். மற்றொரு பெரிய அதிர்ச்சியாக கதிர் மற்றும் ஞானத்தின் இந்த மனமாற்றம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஜனனி பின்னால் ஓடுவதையும் அவளுக்கு எடுபிடி வேலை செய்யும் ஒரு கேரக்டராகவே இருந்து வந்த சக்தி சமீபத்தில்தான் துணிச்சலாக பேச துவங்க, கதை சற்று சூடுபிடித்தது. அண்ணன்களை எதிர்ப்பதும், கரிகாலனை வெளுத்து வாங்குவதும் என ஒரே மாஸ் காட்டிய சக்தி, ஜனனியின் பெற்றோர் பிரச்சனையில் காட்டிய அக்கறையை பார்த்து மனம் இறங்கிய ஜனனி சக்தி மீது இருக்கும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினாள். 



மெல்ல மெல்ல சக்தி கேரக்டருக்கு வெயிட்டேஜ் கொடுத்து ஸ்பேஸ் கொடுத்த  இயக்குநர் ஒரே மாதத்தில் சக்தியை இப்படி அடிபட்டு ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக்கி விட்டாரே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். தர்ஷினியை தேடும் பணியில் ஈடுபட்டபோது கார் ஒன்று வந்து வேகமாக மோதி சக்தியை இடித்து கீழே தள்ளியதில் நினைவை இழந்த சக்தி, உடனே ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டான். இடுப்பு எலும்பு முறிந்து இப்போது படுத்த படுக்கையில் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


கடந்த மாதம் கதிர் கை கால் உடைந்து ஹாஸ்பிடலில் இருக்க, இந்த மாதம் சக்திக்கு அதே நிலை ஏற்பட்டுள்ளது. யாராவது ஒருவர் மாறி மாறி ஹாஸ்பிடலில் இருக்க வேண்டும் என்பது எதிர்நீச்சல் வீட்டின் விதியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. 



ஜனனி மற்றும் ஈஸ்வரியின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் இந்த விபத்து வேண்டும் என்றே நடந்து இருக்கலாமோ என்ற யூகம் ரசிகர்களுக்கு உள்ளது. தர்ஷினியின் கடத்தல் சதிக்கு பின்னால் குணசேகரன் இருக்கலாம் அல்லது ராமசாமியும் கிருஷ்ணசாமியும் குணசேகரன் நன்மதிப்பை பெறுவதற்காக போட்டு இருக்கும் பிளானாக இருக்குமோ என பல மாதிரியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் எதிர்நீச்சல் சீரியலின் தீவிர ரசிகர்கள். 


வரும் எபிசோட்களில் தர்ஷினியின் கடத்தல் குறித்த ஒரு தெளிவான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.