சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றதால் அவளை அங்கும் இங்கும் விசாரித்து தேடி வருகிறாள் ஈஸ்வரி. அவளுக்கு துணையாக சக்தி, ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி இருக்கிறார்கள். தர்ஷினியை பற்றி விசாரிக்கும் சமயத்தில் தான் திடீரென சக்திக்கு விபத்து ஏற்பட, அவருக்கு இடுப்பு எலும்பில் கிராக் ஏற்பட்டு விட்டது. அதனால் அவன் ஒரு வாரத்திற்கு பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என டாக்டர் சொல்லி விடுகிறார்.
குணசேகரன் சந்தேகம் முழுவதும் ஜீவானந்தம் மீது தான் இருக்கிறது. ஈஸ்வரி தான் தர்ஷினியை ஜீவானந்தத்திடம் அழைத்து சென்று மறைத்து வைத்திருக்கிறாள் என்பது அவரின் யூகம். தர்ஷினியை தேடும் பொறுப்பை ராமசாமியிடமும், கிருஷ்ணசாமியிடமும் கொடுத்துள்ளார் குணசேகரன்.
சக்தியை பார்த்து கொள்ள ஆதிரை வந்ததால் ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி நால்வர் மட்டும் தர்ஷினியை தேடி செல்கிறார்கள். மறுபக்கம் தர்ஷினியை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றுகிறார்கள். அப்போது தர்ஷினி கடத்தல்காரர்களிடம் தனக்கு வயிறு வலிப்பதாகவும் அதனால் மாத்திரை பெயரை எழுதி தருகிறேன் வாங்கி தாருங்கள் என சொல்லி அவளை கடத்தி வந்து அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆங்கிலத்தில் எழுதி கொடுக்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய ( பிப்ரவரி 1 ) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினியை கடத்தி வைத்து இருப்பவர்களில் ஒருவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறான். அதனால் பயத்தில் தர்ஷினி கத்தி கூச்சல் போட அதை கேட்ட மற்ற ரவுடிகள் வேகவேகமாக மாடிக்கு ஓடி வருகிறார்கள்.
ஜனனி, ஈஸ்வரி மற்ற இருவரும் ஒரு இடத்தில் யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார்கள். அப்போது சில ரவுடிகள் வந்து அநாவசியமாக பேசி ஜனனியிடம் மற்றவர்களிடம் வம்பு செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் பெண்கள். அப்போது யாரோ ஒருவர் காரில் இருந்து வந்து இறங்குகிறார். அவர் முகத்தை ப்ரோமோவில் காட்டவில்லை. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.
அநேகமாக காரில் வந்து இறங்கியது ஜீவானந்தமாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மீண்டும் ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்தால் சீரியலில் பரபரப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குணசேகரன் கடத்தி வைத்திருக்கிறாரா? அல்லது இது ஏதாவது புது வில்லனின் வேலையா? என்பது வரும் எபிசோட்களில் தெரிய வரும். இருப்பினும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல்.