சன் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஏராளமான ட்விஸ்ட் அண்ட் டர்னுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஆதிரை கரிகாலன் இருவரையும் மாப்பிள்ளை விருதுக்காக வீட்டுக்கு அழைத்து வர சொல்லி குணசேகரன் சக்தி, நந்தினி மற்றும் ஜனனியை ஜான்சியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
ஆதிரை தன்னுடைய வீட்டுக்கு வந்ததும் குணசேகரன் அவளை தடுத்து நிறுத்துகிறார். ஆரத்தி எடுத்த பிறகு தான் உள்ளே வரவேண்டும் என வீட்டில் உள்ள பெண்களை ஆரத்தி எடுக்க சொல்கிறார்கள் ஆனால் அவரை யாரும் மதிக்கவில்லை. அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அழைத்து கொண்டு பள்ளி ஆசிரியை ஆட்டோவில் வந்து இறங்குகிறார். மூன்று நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா பெரியவள் ஆன விஷயத்தையும் வீட்டில் சொல்லாதது பற்றியும் சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
குழந்தைகளுக்கு நல்லதை எல்லாம் சொல்லி கொடுக்காமல் கண்டதையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். இந்த வீட்டு பெண்கள் என குணசேகரன் சொல்ல ஐஸ்வர்யா எனக்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. உங்களை பார்த்து தான் எப்படி எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ள கூடாது என்பதை கற்றுக் கொண்டேன் பெரியப்பா என அந்த சின்ன பொண்ணு வெடுக்கென பேச அசிக்கப்பட்டார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. குணசேகரன் ஞானத்திடம் "உங்க மாமியார் வீட்டுக்கு போன் போட்டு தகவல் சொல்லு முறை செய்வதற்கு" என சொல்ல பத்திரகாளியாக மாறிய ரேணுகா "இந்த மாதிரி வேலைய எவனாவது பாத்தீங்கன்னு வச்சுக்க" என மிரட்ட "என்னமா செய்வ" என்கிறார் குணசேகரன். "என்ன வேணாலும் செய்வேன்" என உக்கிரமாக சொல்கிறார் ரேணுகா.
டைனிங் ஹாலில் குணசேகரன், ஞானம் மற்றும் கதிர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ஜனனி மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறாள். அப்போது குணசேகரன் "ஏய் நாச்சியப்பன் மகளே! இதுக்கெல்லாம் ஆரம்ப புள்ளி நீதானே, கூடிய சீக்கிரம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அந்த வீட்டில இருந்துகிட்டு இந்த வீட்டுக்கு வெடி வைக்குறீயா நீ" என ஜனனியை பார்த்து சவால் விடுகிறார். அண்ணன் வாயில் மிரட்டுகிறார் என்றால் தம்பி கதிரோ கண்களாலே எரித்து விடுவது போல ஜனனியை பார்க்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ முடிவு வருகிறது.
இந்த ஹிண்ட் வைத்து பார்க்கையில் ஜனனி அமைதியாக போகமாட்டாள் என்பது தெரிகிறது. நிச்சயம் அவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்து விட்டு தான் போவார் என்பது தெரிகிறது. குணசேகரன் அடிக்கடி இப்படி அந்த வீட்டு பெண்களிடம் மொக்கை வாங்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இன்று அவர் எப்படி அசிங்கப்பட போகிறார் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.