சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆதிரையும் கரிகாலனும் மாப்பிள்ளை விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ஜனனி, நந்தினி மற்றும் சக்தி ஜான்சி ராணி வீட்டுக்கு வந்துள்ளனர். ஆதிரையிடம் அருணுக்கு என்ன நடந்தது என்பதை எடுத்து சொன்ன பிறகு தான் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டு அவர்களுடன் வீட்டுக்கு போக தயாராகிறாள் ஆதிரை.
வழக்கம் போல ஜான்சி ராணி சமைச்சுட்டு போ, விளக்கேற்றிவிட்டு போ என ஆதிரையை சித்திரவதை செய்கிறாள். அனைத்தையும் மீறி ஆதிரையை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். கரிகாலன் செய்வதை பார்த்து அழுது ட்ராமா போடுகிறாள் ஜான்சி ராணி.
மறுபக்கம் ரேணுகாவிடம் மாப்பிள்ளை அழைப்பிற்காக சென்றவர்கள் ஏன் இன்னும் வரவில்லை என ரேணுகாவின் வாயை பிடுங்குகிறார் குணசேகரன். வழக்கம் போல குத்தலாக பதில் அளித்த ரேணுகாவை பார்த்து ஓவரா தான் பேசுற என்கிறார் குணசேகரன். அதற்குள் மாப்பிள்ளை விருந்துக்கு அழைக்க சென்றவர்கள் அனைவரும் வீட்டுக்கு வர அனைவரும் வாசல் நோக்கி செல்கிறார்கள்.
காரில் இருந்து இறங்கி வேகவேகமாக வீட்டுக்குள் ஓடும் ஆதிரையை தடுத்த குணசேகரன் போய் கரிகாலனோட நில்லு. ஆரத்தி எடுத்த பிறகு தான் உள்ளே வர வேண்டும் என சொல்லி ரேணுகாவை ஆரத்தி எடுக்க சொல்கிறார். ஆனால் அவள் தயார் செய்யவில்லை என்பது தெரிந்ததும் முறை என ஒன்னு இல்லையா என சொல்லி நந்தினியை எடுக்க சொல்கிறார் அவளும் முடியாது என மறுக்க ஜனனி ஏன் நீங்க எடுக்க வேண்டியது தானே என கதிரை பார்த்து கேட்கிறாள். இது எல்லாம் பொம்பளைங்க செய்யும் சடங்கு என்றதும் எந்த புத்தகத்துல பொம்பளைங்க தான் இதெல்லாம் செய்யணும் என சொல்லி இருக்கு என கேட்கிறாள் ஜனனி.
அந்த சமயத்தில் வீட்டு குழந்தைகள் அனைவரையும் அழைத்து கொண்டு அவர்களின் ஆசிரியை ஆட்டோவில் வந்து இறங்குகிறார். அவர்களை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ரேணுகாவை அழைத்த ஆசிரியை வீட்டில் ஏதாவது பிரச்சனையா? ஐஸ்வர்யா மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். தனியாக அழைத்து விசாரித்த போது தான் தெரிந்தது அவள் மூன்று நாட்களுக்கு முன்னர் வயதுக்கு வந்து விட்டதை பற்றி கூறியுள்ளாள். இதை கேட்ட அனைவரும் ஷாக்.
ஞானத்துக்கும் ரேணுகாவுக்கும் இடையே சண்டை பெரிதாக அனைவரும் ஐஸ்வர்யாவை உள்ளே அழைத்து செல்கிறார்கள். அனைவரும் ஏன் இப்படி செய்தாய் அம்மாவிடமாவது சொல்லி இருக்கலாம் இல்லையா என கேட்க ஐஸ்வர்யா மளமள என தனது மனதுக்குள் இருந்ததை கொட்டி தீர்க்கிறாள். இந்த வீட்டில் பெண்ணாக பிறந்தால் அவர்கள் வாழ்க்கை நிச்சயமாக காலி. ஆதிரை அத்தைக்கு ஏற்பட்ட நிலை தான் அனைவருக்கும். உங்களை போல என்னையும் மாற்ற இது தான் முதல் ஸ்டெப். எனக்கு இந்த பங்க்ஷன் எல்லாம் வேண்டாம். அதற்கும் பெரியப்பாவிடம் தான் அப்பா கேட்க வேண்டும். அப்பா அசிங்கப்படும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அவர் எனக்காக கஷ்டப்பட வேண்டாம். பெற்றவர்கள் படிக்கவில்லை என்றாலும் நம்ம குழந்தைகள் நன்றாக படிக்க விடும் என்று தான் அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுவார்கள் ஆனால் இவர்கள் எல்லாம் வேற டைப் என சொல்கிறாள் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா பேசுவதை கேட்ட ஞானம் அவள் மீது கோபப்பட ரேணுகா எகிறி கொண்டு போகிறாள். நீ ஒரு ஆம்பளையா இருந்த உன்னோட பொண்ணு கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லு என்கிறாள். குணசேகரன் அங்கு வந்து பொம்பள பிள்ளைகள் வாழ்க்கையில பெரியவள் ஆவது எவ்வளவு முக்கியமான விஷயம். அதை பத்தி எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. தேவை இல்லாததை எல்லாம் சொல்லி கொடுக்குறீங்க என்கிறார். எனக்கு யாரும் எதுவும் கற்றுக் கொடுக்கவில்லை. நீங்க தான் எல்லாமே கத்து கொடுத்தீங்க.எப்படி மத்தவங்கள நடத்த கூடாது என எல்லாத்தையும் உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன் பெரியப்பா என சரியான பதிலடி கொடுக்கிறாள் ஐஸ்வர்யா. இதை கேட்ட குணசேகரனுக்கு செம்ம ஷாக். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.