சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா குணசேகரனை எதிர்த்து பேசுகிறாள். யாரை எப்படி நடத்தக்கூடாது என்பதை உங்களை பார்த்து கற்றுக் கொண்டேன் என முத்தத்தில் அறைந்தது போல் பளிச்சென்று பேசினாள். அதை சற்றும்  எதிர்பார்க்காத குணசேகரன் அதிர்ச்சியில் உறைகிறார். அத்துடன் முதல்நாள் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஞானத்தை பார்த்து "பாருப்பா உன்னோட பிள்ளை எப்படி பேசுதுன்னு" என்கிறார். அப்பா பாத்துகிட்டு தான் இருப்பார் அவரால வேற எதுவும் செய்ய முடியாது. நீங்க அவரை அப்படி லாக் செஞ்சு வைச்சு இருக்கீங்க" என ஐஸ்வர்யா தைரியமாக சொல்ல அவளை அடிக்க போகிறார் ஞானம். ரேணுகா ஞானத்தை தடுத்து "என்னோட பொண்ணு மேல கையை வைக்க கூடாது. அவளுக்காக நான் எதையும் செய்ய துணிந்துவிட்டேன்" என ரேணுகா கதற "என்னமா மிரட்டுரியா? என்ன செய்வ? என்ன செய்ய முடியும் உன்னால " என குணசேகரன் கேட்கிறார். "எதை வேணாலும் செய்வேன். நின்னு பாரு" என்கிறாள் ரேணுகா. 


 



உன்னோட மாமியாருக்கு போன் போட்டு வந்து முறை செய்ய சொல்லு என ஞானத்திடம் குணசேகரன் சொல்ல "முறை செய்றேன் என்ற பேர்ல  எவனையாவது கூப்டீங்கனு வச்சுக்க அத்தனை பேரையும் அசிங்க படுத்திப்பிடுவேன். என்னோட பெண்ணுக்காக என்ன வேணுனாலும் செய்வேன்" என்கிறாள் ரேணுகா. உடனே ஐஸ்வர்யா "பங்க்ஷன்  எதையாவது ஏற்பாடு செஞ்சீங்கன்னா நான் வீட்டை விட்டு ஓடி போய்டுவேன். எல்லாத்துக்கும் பிளான் பண்ணி தான் வச்சு இருக்கேன். ஓடி போய்டுவேன் இல்லனா செத்து போய்டுவேன்" என மிரட்டுகிறாள். 



நீ ஏண்டி சாகணும் நான் தான் சாகணும். உனக்காக தான் இத்தனை நாள் இந்த வீட்டில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தேன். தாய், தங்கை, தாரம், மகள் யாரையும் விட்டு வைக்க மாட்டீங்களா. இந்த வீட்ல இன்னைக்கு ஒரு பிணம் விழும். என் பிள்ளை மேல யாராவது கையை வைச்சா என்னோட பிணத்தை தாண்டி தான் போகணும்" என ரேணுகா வெறியாட்டம் ஆடிவிடுகிறாள். கோபத்தில் கொந்தளிக்கிறார் குணசேகரன். 



"ஞானம் பொண்டாட்டி வெட்டுவேன் என்கிறாள், அவனோட பொண்ணு ஓடிப்போயிடுமாம். என்னை அசிங்க படுத்தினா பரவாயில்லை. அது எப்பவும் நடப்பது தானே. ஆனா ஞானம் உன்னை அசிங்கப்படுத்திட்டா. அது தான் தாங்க முடியல" என்கிறார் குணசேகரன்.


மாப்பிள்ளை விருந்துக்கு வந்து இருக்கான். அவனுக்கு சமைச்சு போட வேண்டாமா. பட்டினியா போட முடியும். ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி போட்டா அது நல்லாவா இருக்கும். அது கேவலம் இல்லையா. மருமகள் என்ற உரிமை மட்டும் வேணும் ஆனால் கடமை செய்ய மாட்டார்களாம். அவங்க மட்டும் தான் இந்த வீட்டுக்காக உழைக்குறாங்க. நம்மளும் தான் காலையில இருந்து உழைக்குறோம். நன்றி கெட்டவளுங்க எப்படி பேசுறாங்க பாத்தியா. எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா இருக்க. 


 
ஐஸ்வர்யாவுக்காக புது டிரஸ் வாங்க ஜனனி கீழே செல்ல ஜனனியை  பார்த்து நீ தான் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி இருக்கு .இது எல்லாத்துக்கும் நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்குறேன் என்கிறார். அவளும் எதுவும் பேசாமல் சென்றுவிடுகிறாள். 


இன்னிக்கு நான் மருமகளா என்ன செய்யப்போகிறேன் என பார்க்க போகிறார்கள். நீங்க போய் ஐஸ்வர்யாவை குளிக்க வைங்க. நான் போய் அவளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன் என கூறி நந்தினி  கீழே இறங்கி வர குணசேகரன் சமைக்க சொல்கிறார். அதற்கு நந்தினி நாங்கள் வீட்டை சுத்தம் செய்துவிட்டு குளித்த பிறகு சமைத்து தருகிறேன் அதுவரையில் அனைவரும் வெளியே உட்கார்ந்து கொள்ளுங்கள் என நக்கலாக சொல்லிவிட்டு செல்கிறாள். 


 



ஜனனியும், சக்தியும் வரும் வழியில் கௌதமை பார்க்கிறார்கள். சக்தி கௌதமிடம் அன்றைக்கு ஜனனி உன்னிடம் என்ன நடந்தது என்பது தெரியாமல் கோபத்தில் பேசிவிட்டாள் அதை தயவு செய்து மன்னித்துவிடு என்கிறார்கள். என் மேலும் தவறு உள்ளது. அருணை நானே கூட்டிக்கொண்டு வந்து இருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது. ஆனால் என்னுடைய பிரச்சனை அப்படி. அதில் அவன் சிக்கி கொள்ள கூடாது என்று தான் தனியாக அனுப்பி வைத்தேன். பேப்பர்ல நியூஸ் பார்த்த பிறகு எனக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அருண் ஆதிரை திருமணம் நடக்காதது வருத்தமாக இருக்கிறது. 


கௌதமுக்கு ஜீவானந்தம் அசிஸ்டன்ட் போன் செய்கிறாள். அவரை நேரில் பார்க்க வேண்டும் என பல நாட்களாக வெயிட் பண்றீங்க இல்லையா. உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஆனால் கவனமாக வாருங்கள். உங்களை பல பேர் கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு நான் அட்ரஸ் அனுப்புகிறேன் என்கிறாள். 


ஐஸ்வர்யாவிடம் ஈஸ்வரி பேசி கொண்டு இருக்கிறாள். நீ பேசியது பற்றி நந்தினி சொன்னதும் எனக்கு மனசு உருகி போனது. நீ வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேறுவாய். அதற்கான தகுதி உனக்கு இருக்கு. நமக்கு பிடித்ததை நேர்மையாக செய்யணும். உங்க பெரியப்பா மாதிரி பிற்போக்குவாதிகள் லட்சம் பேர் இருக்கிறார்கள். இது தான் இந்த சமூகம் என அறிவுரை கூறுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.