சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில்  ஐஸ்வர்யாவுக்கு சடங்கு சுத்த போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதை மீண்டும் அனைவர் முன்னிலையிலும் உடைத்த ரேணுகா. பட்டம்மாளின் 40 % ஷேர் ஆக்கிரமிப்பிக்கான பொறுப்பை முழுமையாக கௌதமிடம் ஒப்படைக்கிறார் ஜீவானந்தம். மாப்பிள்ளை விருந்து என்ற பெயரில் கரிகாலனை அழைத்துவந்து ரசம் சோறு போட்டதற்காக குணசேகரன் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த ஜான்சியை வெளியே போக சொன்னாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை தற்போது வெளியாகியுள்ளது. சண்டை போட்டு வீட்டுக்கு ஆதிரையை இழுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே வந்த ஜான்சி ராணி, அங்கு அனைவரின் பேச்சும் சரியில்லை என்பதால் "இதுக்கு மேல பேசினா சரியா வராது" என ஆதிரையின் கையை பிடித்து தரதரவென இழுத்து வருகிறாள்.  அதை பார்த்து கொந்தளித்த ஈஸ்வரி மகள் தர்ஷினி "ஸ்டாப் இட் இப்போ வெளிய போறீங்களா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா" என கையை காட்டி மிரட்டுகிறார்.


தர்ஷினி இப்படி பேசுவாள் என யாருமே எதிர்பார்க்காததால் அனைவரும் ஷாக்காகி அதிர்ச்சியில் பார்க்கிறார்கள். கரிகாலன் உடனேயே "நிஜமாலுமே இவங்க செஞ்சு விட்டுருவாங்க மா. மாமா மாதிரி கிடையாது. அவர் தான் வாயிலே வட சுடுவாரு" என்கிறான். 


 



அன்று இரவு ஐஸ்வர்யா, ரேணுகாவிடம் 'அம்மா நா இனிமே கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போறேன். இவ்வளவு பீஸ் கட்டி இவ்வளவு பெரிய ஸ்கூல்ல படிக்கணும்ன்னு அவசியம் இல்ல மா. அசிங்கமா இருக்கு. அப்பா கட்டினா பரவாயில்லை. பெரியப்பா தானே கட்டுறாரு. இதை அவர் அடிக்கடி சொல்லி காட்றாரு. நான் எக்ஸாம்காக படிக்க விரும்பல. புரிஞ்சு படிக்கணும். தமிழ் என்னோட தாய் மொழி தானே கவர்மெண்ட் ஸ்கூலுக்கே போறேன்" என்கிறாள்.


இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தாலும் ஜனனி ஐஸ்வர்யாவை நினைத்து சந்தோஷப்படுகிறாள். ஆதிக்கமான பேச்சுக்களால் ஐஸ்வர்யா மனம் இறுக்கமாக இருந்தாலும் ஆனால் அதை சற்று தள்ளி வைத்து சிந்திக்கணும். ஐஸ்வர்யா அப்படி சிந்தித்ததால் தான் சிகரம் தொட முடிவெடுத்துவிட்டாள் என ஜனனி ஐஸ்வர்யாவை நினைத்து பெருமையாக உணர்கிறாள். இது தான் இன்றைய எபிசோட்டுக்கான  ப்ரோமோ. 


 




இன்று பெரிய சம்பவம் இருக்கு. குணசேகரனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கிய ஜனனியை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பெண்களுக்கான நியாயத்துக்காக போராடுகிறார்கள். இந்த வாரம் எதிர் நீச்சல் சீரியலின் ஹைலைட் ஐஸ்வர்யா மற்றும் தர்ஷினி தான். இதற்கு குணசேகரன் எக்ஸ்பிரஷன் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.