சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலின் முதல் நாள் எபிசோடில் கௌதம் முதல் முறையாக ஜீவானந்தத்தை சந்திக்கிறான். அந்த சமயத்தில் போன் மூலம் ஒரு நல்ல தகவல் வருகிறது. அதில் பட்டம்மாளின் 40 % ஷேர்கான ரைட்ஸ் இன்னும் ஓரிரு நாளில் ஜீவானந்தம் பெயரில் மாறிவிடும் என தகவல் சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு பட்டம்மாளின் பேத்தியான ஜனனி குறித்து கேட்டறிந்து கொள்கிறார் ஜீவானந்தம். அத்துடன் அந்த எபிசோட் முடிவுக்கு வந்தது.
நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம், கௌதம் மாற்றும் பார்ஹனா மூவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது கௌதம் கொடைக்கானலில் போலீசிடம் சிக்கியது குறித்து ஜீவானந்தம் கேட்டு தெரிந்து கொள்கிறார். அந்த சமயத்தில் தான் பட்டம்மாளின் 40 % குறித்த போன் கால் வருகிறது. இது குறித்து கௌதமுக்கு விளக்கம் கொடுத்து அதை முடிப்பதற்கான மொத்த பொறுப்பையும் கௌதமிடன் ஒப்படைக்கிறார் ஜீவானந்தம். இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான் கௌதம்.
மறுபக்கம் ரசம் சோறு சாப்பிட்ட குணசேகரன் வீட்டு ஆண்கள் அனைவரும் கடுப்பில் புலம்பிக்கொண்டு இருக்க பெண்கள் அனைவரும் ஐஷுவை அலங்காரம் செய்து அழைத்து வருகிறார்கள். நந்தினி ஐஷுவை மீனாட்சி அம்மன் படத்துக்கு விளக்கேற்றி வணங்க சொல்கிறாள். அதை பார்த்த குணசேகரன் "என்ன மா தீட்டா இருக்க பொண்ண போய் விளக்கேத்த சொல்ற" என்கிறார். "அந்தம்மாவும் பொண்ணு தானே எங்க சாஃப்ட்டா இருக்கனும் யாருகிட்ட முரட்டுத்தனத்தை காமிக்கணும் என அவங்களுக்கு தெரியும்" என நக்கலாக கூறுகிறாள். கதிர் கொந்தளிக்க குணசேகரன் தடுக்கிறார். "விடுப்பா இந்த ஆட்டம் எல்லா இன்னும் நாலு நாளைக்கு தான். அதுக்கு பிறகு அவர்கள் கொட்டத்தை நான் அடக்குறேன்" என்கிறார்.
அந்த நேரம் பார்த்து ரேணுகாவின் அம்மா வந்து ஐஷுவை கொஞ்சுகிறார். ஞானத்திடம் போய் எப்படி மாப்பிள்ளை இந்த பொண்ணை கரையேத்த போறீங்க. முறை செய்ய ஒன்னு விட்ட அண்ணனை வர சொல்லி இருக்கேன் என ரேணுகாவின் அம்மா சொல்ல கடுப்பில் அம்மாவை திட்டி விடுகிறார் ரேணுகா. என் மகளின் விருப்பம் போல தான் நடப்பேன் என்கிறார் ரேணுகா.
உங்க பொண்ணு கிட்ட நல்ல புத்திமதி சொல்லி சடங்கு சுத்த சொல்லுங்க. நாளைக்கு ஞானத்துக்கு ஏதாவது நடந்தா என்ன பண்றது. கடவுள் பக்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை என சொல்லிவிட்டு ஒரு வேலையாக வெளியே செல்கிறார்.
ஐஸ்வர்யா ஸ்வாமிக்கு விளக்கேற்றியதும் அனைவரும் ஆசீர்வாதம் செய்கிறார்கள். சக்தி சென்று ஞானத்தை அழைத்து வந்து ஐஷுவை ஆசீர்வாதம் செய்ய சொல்கிறான். ஐஷுவை பார்த்து கண்கலங்கிய ஞானம் நான் பாத்துக்குறேன் டா. நீ எதையும் நினச்சு குழப்பிக்காத என்கிறார். அண்ணன் இருக்கும் வரைக்கும் எந்த உணர்ச்சியும் இருக்காது. அண்ணன் இல்லனா தான் பெத்த பிள்ளை மேல கூட அப்பாவுக்கு பாசம் வரும் என சொல்கிறாள் ரேணுகா.
நாளைய எபிசோடில் அனல் தெறிக்க போகிறது. ஜான்சி வாய் சும்மாவா இருக்கும். வீடு திரும்பியதும் குணசேகரனுக்கு பெரிய ஆப்பு வைக்க காத்திருக்கிறாள் ஜான்சி ராணி. கெளதம் எப்படி பட்டம்மாள் விஷயத்தை ஹேண்டில் செய்ய போகிறான். இவை அனைத்தும் வரும் எபிசோடில் தெரியவரும்.