சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஆதிரையை வீட்டுக்கு இழுத்து செல்வதற்காக ஜான்சி ராணி குணசேகரன் வீட்டுக்கு வருகிறாள். அங்கு வந்தவள் மாப்பிள்ளை விருந்து என சொல்லி கரிகாலனுக்கு ரசம் சோறு போட்டதை வைத்து பெரிய பிரச்சனை செய்வதற்காக வந்து சீன் கிரியேட் செய்து வருகிறாள்.  அவளின் அநாகரீகமான பேச்சை கேட்டு கடுப்பான ஜனனி ஜான்சியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள் அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 



இன்றைய எபிசோடில் ஜான்சி ராணி, நந்தினியிடம் "சீவி சிங்காரிச்சு அங்கு வந்த போதே தெரியும் நீங்க ஏதோ பிளான் போட்டு தான் அங்க வந்து இருக்கீங்கன்னு. எங்க வீட்டில சொத்துக்கு கதியில்லைன்னா இங்கே அனுப்பி வைச்சேன். நான் காச்சுறதுல மட்டும் இல்ல சமையல் சூப்பரா செய்வேன்" என்கிறாள். வாய்க்கு வந்தபடி அனைவரையும் பேசியதால் ஜனனி, ஜான்சியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள். "அண்ணன் வீட்டில் இல்லாததால் தான் அது அது ஆடுது. இது சரிப்பட்டு வராது நீ வாடி" என ஆதிரையை தர தரவென இழுத்து வருகிறாள்.


கதிர் வரவே அவனிடம் ஜான்சி முதலிரவு ரெடி பண்ண சொல்லி கேட்கிறாள். ஆதிரை அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என சொல்ல மீண்டும் இது சரிப்பட்டு வராது என விடபடியாக ஆதிரையை இழுத்து செல்கிறாள். யாரும் எதிர்பார்க்காத தர்ஷினி வந்த ஸ்டாப் இட். இந்த நியூசென்ஸை நிறுத்துங்க. "வீட்டை விட்டு வெளிய போங்க இல்லனா போலீசுக்கு போன் பண்ணுவேன்" என சொல்ல கதிர் தர்ஷினியை என்ன ஓவரா பேசுற என திட்டுகிறான். "நான் ஓவரா பேசுறேனா இவங்க வந்ததில் இருந்து என்னென்னமோ பேசுறாங்க. இந்த வீட்ல இருக்கவே பிடிக்கல. நாங்க இங்க இருக்கிறதா வேண்டாமா" என தர்ஷினி சொல்ல கூடவே குட்டி பொண்ணு தாராவும் "ஆமா எங்களுக்கு பிடிக்கல. இந்த ஆண்டியை வெளியே போக சொல்லுங்க" என்கிறாள்.


கரிகாலன் உடனே அம்மா இவங்க நிஜமாலுமே செஞ்சுருவாங்க. மாமா மாதிரி வாயில வட சுட மாட்டாங்க. நீ கிளம்பு நான் பார்த்துக்குறேன் என சொல்லி ஜான்சியை அனுப்பி வைக்கிறான் கரிகாலன். தர்ஷினியை அனைவரும் பாராட்டுகிறார்கள். 


குணசேகரன் ஆடிட்டரை சந்திக்க செல்கிறார். இருவரும் காரிலேயே உட்கார்ந்து பேசிக் கொள்கிறார்கள். உங்க வீடு மருமகள் பெயரில் நடத்தப்படும் பிசினஸ் அனைத்தையும் உங்க பெயரிலேயே மாற்றிவிடுங்கள். உங்க அப்பத்தா சொத்தே உங்களுக்கு வருமா என சந்தேகமா இருக்கு எஸ் சொல்கிறார் ஆடிட்டர். பட்டம்மாளிடம் இருந்து கைரேகை வாங்க முடியல. கையெழுத்து வாங்கியது இன்னும் பதிவு ஆகல. இதற்கு இடையில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. ஆனால் அது என்ன என்பது பிடிபடவில்லை. என்ன நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம். மருமகள்கள் பெயரில் நடத்தப்படும் கம்பெனிகளின் லிஸ்ட் இங்கே இருக்கிறது, இதை யார் பெயரில் மாற்ற வேண்டும் என சொன்னீங்கன்னா அதன் படி செய்து விடுவேன் என ஆடிட்டர் சொல்கிறார். 


ஜீவானந்தம் மற்றும் பர்ஹானா இருவரும் கடவுள் பக்தி பற்றி பேசிக்கொள்கிறார்கள். அந்த சமயத்தில் கெளதம் மீது உங்களுக்கு முழுமையா நம்பிக்கை இருக்கா என கேட்கிறாள். எடுத்த உடனேயே பட்டம்மாள் விஷயத்தை டீல் செய்ய சொல்லி விட்டீர்களே என்கிறார். அவனுக்கு நான் ஒரு பரீட்சை வைத்து இருக்கிறேன். அதை அவன் செய்வதும் செய்யாமல் போவதும் அவன் கையில் தான் உள்ளது என்கிறார் ஜீவானந்தம். 


 



 


மறுபக்கம் குணசேகரன் வீட்டு பெண்கள் அனைவரும் ஒன்றாக வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஐஸ்வர்யா ஸ்கூல் போவது பற்றி பேசுகிறாள். "இவ்வளவு பீஸ் கட்டி இவ்வளவு பெரிய ஸ்கூல்ல படிக்கணும் என அவசியமே இல்லை. நான் கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போறேன். அப்பா பீஸ் கட்டினா பரவாயில்லை. பெரியப்பா பீஸ் கட்றதுனால அடிக்கடி அதை சொல்லி சொல்லி காட்றது எனக்கு பிடிக்கல. தமிழ் தானே என்னோட தாய் மொழி, அதை ஈஸியா நான் அடாப்ட் பண்ணிக்குவேன். எனக்கு புரிஞ்சு படிக்கணும் அது தான் முக்கியம். இந்த வீட்டிலேயே எனக்கு நிறைய அனுபவம் கிடைத்து விட்டது. இது சரியா வரும் என எனக்கு தோன்றுகிறது " என ஐஸ்வர்யா சொல்கிறாள். ஜனனியும் அவள் மிகவும் தெளிவாக யோசிக்கிறாள். அவளின் போக்கிலேயே விடலாம் என கூறுகிறாள். ரேணுகாவும் அதற்கு சம்மதம் சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.