சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை கிழித்து தொங்கவிட்டனர் ரேணுகா மற்றும் ஐஸ்வர்யா. எதேர்சையாக கௌதமை சந்திக்கும் ஜனனியிம் சக்தியும் அவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஜீவானந்தத்திடம் இருந்து கௌதமுக்கு அழைப்பு வருகிறது. பரபரப்பான கட்டத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.


 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது வரையில் பரபரப்பு குறையாமல் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும்  எதிர் நீச்சல் சீரியல் இன்று மேலும் சூடு பிடிக்க உள்ளது. அதற்கு காரணம் ஜீவானந்தத்தின் என்ட்ரி. வெளியான இன்றைய ப்ரோமோவில் ஜீவானந்தம் பிஏ, கௌதமை அவள் சொல்லும் இடத்திற்கு வரச்சொல்கிறாள். அங்கு வரும் கௌதம் ஜீவானந்தத்தை சந்திக்கிறான். அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது ஜீவானந்தம் தனது பி ஏ விடம் "பட்டம்மாள் வீட்டில் இருந்து அவங்களோட பேத்தி என சொல்லிட்டு அடிக்கடி ஒரு பொண்ணு போன் பண்ணுமே அந்த பொண்ணு பெயர் என்ன?" என கேட்கிறார். பிஏ வும் ஜனனி என்கிறாள். அதை கேட்டு கௌதம் ஷாக்காகி நிற்கிறான்.   


மறுபக்கம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென சொல்லி குணசேகரன், கதிர், ஞானம் மற்றும் கரிகாலனை வெளியில் காத்தாட உட்கார சொல்லி அனுப்பிவைக்கிறாள் நந்தினி. நால்வரும் கடும் பசியில் வெளியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். "மாப்பிள்ளை விருந்து போறோமே என வெறும் வயித்தோட வந்தேன்" என கரிகாரன் பரிதாபமாக சொல்கிறான். 


 



அந்த நேரம் பார்த்து சக்தியும் ஜனனியும், ஐஸ்வர்யாவுக்கு புது துணி வாங்கிவிட்டு வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த குணசேகரன் "இங்க பாருங்க பா ராஜாவும் ராணியும் வருகிறார்கள். பேசாமல் நம்ம நாலு பேரும் வீட்டை காலி பண்ணிட்டு போயிடலாம் பா" என நக்கலாக சொல்கிறார்.  


சமயலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் நந்தினி "வீட்டில் இருக்க பொம்பளைங்க எல்லாரையும் அழவைத்து விட்டு விருந்தா கேக்குது விருந்து என கொந்தளிக்கிறாள். அவள் சமையலில் ஏதோ ஒரு பெரிய சம்பவம் இருக்க போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. பாவம் பசி பசி என துடிக்கும் கரிகாலன் சாப்பிட்ட பிறகு என்ன கதி ஆக போறானோ. 


ஜீவானந்தம் அடுத்த பிளான் என்னவாக இருக்கும்? விரைவில் ஜனனி ஜீவானந்தம் சந்திப்பு நிகழும் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் எதிர் நீச்சல் தீவிர ரசிகர்கள்.