சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா தனது மகன் குணசேகரன் இந்த நிலையில் இருப்பதை பார்த்து கவலையில் கடவுளிடம் மகனுக்கு விரைவில் உடல் நலம் சரியாக வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறார். அதற்கு குணசேகரன் "நான் ரொம்ப பெரிய பிரச்சனையில மாட்டிகிட்டு இருக்கேன். அந்த நரைச்ச முடி கிழவி சொத்துக்களை எல்லாம் ஒரு ரவுடி பய வாயில போட்டுருச்சு. இதை எல்லாம் சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா. சொத்து போனது கூட பரவாயில்ல ஆனா மானத்தை இழந்து அலங்கோலமா நின்னேன்" என கூறி அழுகிறார். 


 



"இந்த ஜனனியை தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு எப்படி ஆடுன. இப்படி சொத்து எல்லாம் போனதற்ககு முக்கிய காரணம் இவ தான். உன்னோட மருமகள்கள் கிட்ட சொல்லிட்டேன். போன சொத்தை எல்லாம் திருப்பி கொண்டு வருவது அவங்களோட கடமை" என்கிறார் குணசேகரன்.  


இதை கேட்டு கோபமான ரேணுகா "நாங்க ஏதோ தப்பு செய்த மாதிரி கடமைன்னு சொல்றீங்க. ஆரம்பத்திலே உதவி பண்ணுங்கன்னு சொல்லிட்டு இப்போ எங்க தலையில கட்டறீங்க. உங்க அப்பத்தா  ஏமாந்து யார்கிட்டயோ கொடுத்ததுக்கு நாங்க என்ன பண்ண முடியும். உங்களால முடியாத போது எங்களை சும்மா விட்டு விடுவானா?" என்கிறாள் ரேணுகா. 


ஞானம் உடனே "இங்க மட்டும் பாய்ண்ட் பாய்ண்டா பேசுற இல்ல. அங்க போய் பேசு" என்கிறான் "நீங்களே உங்க பிள்ளைகளுக்காக இறங்கி வராம புடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி இருக்குற அப்போ  எவனோ ஒருத்தன் எப்படி இறங்கி வருவான்" என கேட்கிறாள் ரேணுகா. "எங்களுக்கு தெரியாது நீ போய் சொத்தை வாங்கிட்டு வரணும்" என்கிறான் ஞானம். "அது தான் இத்தனை ஆம்பள ஆட்கள் இருக்குறீங்க இல்ல போய் களத்தில் இறங்கி வாங்கிட்டு வர வேண்டியது தானே" என ரேணுகா சொல்லவும் அவளை அடிக்க கை ஓங்குகிறான் ஞானம். அனைவரும் சேர்ந்து ஞானத்தை தடுக்கிறார்கள். ஜனனி உடனே "சொத்தை நாங்க வாங்கி தரோம். அது உங்க கைக்கு வரும். இதுக்கு மேல பேசாதீங்க" என சொல்கிறாள். 


நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன் என சொல்லி விட்டு செல்கிறார் குணசேகரன்.


விசாலாட்சி அம்மா ஜனனியிடம் "நீ தான் அந்த கிழவியோட சேர்ந்து ஆட்டம் போட்ட. இப்போ நீ தான் அதை திருப்பி கொண்டு வரணும். இது எல்லாமே பெரியவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. அதை அவன் கிட்ட கொண்டு வந்து சேர்க்கணும். அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த வீடே சுக்கு நூறா போயிடும்" என அழுகிறார். 


 



குணசேகரன் வீட்டுக்கு ஆடிட்டர் வருகிறார். "சட்டப்படி போகலாம் என சொன்னீங்களே என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" என கேட்கிறார். கரிகாலன் ஆடிட்டரை சந்தேகப்பட்டு "இன்னும் இவரை நம்புறியா மாமா. இவர் அந்த ஜீவனந்தனுக்கு உதவியா இருக்காரு என எனக்கு சந்தேகமா இருக்கு" என்கிறான். "நீ சொன்னது சரி ஆனா இந்த ஆளுக்கு அவ்வளவு விவரம் கிடையாது" என்கிறார் குணசேகரன். ஆடிட்டர் பின்னர் தான் வந்த விஷயத்தை பற்றி கூறுகிறார். "உங்கள் மருமகள்கள் பெயரில் இருந்த சொத்தை திருப்பி வாங்கியதை ரெஜிஸ்டர் செய்ய வேண்டாம். அது அவர்கள் பெயரிலேயே இருக்கட்டும். உங்க சொத்துக்காக அவங்க போராடுவதை விட அவங்க சொத்துக்காக அவங்க போராடுறது தானே ஸ்ட்ராங்கா இருக்கும். அது தான் நல்லது" என ஐடியா கொடுக்கிறார்.  குணசேகரனும் "சரி அப்படியே இருக்கட்டும்" என்கிறார். 


கோயம்புத்தூரில் உள்ள ஒரு சித்த மருத்துவரை சந்திப்பதற்காக நானும் கதிரும் நாளை காரில் சென்று இரண்டு நாட்கள் தங்கி ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு வருகிறோம் என குணசேகரன் சொல்கிறார். "நீ வீட்டில் இருந்து இந்த பிரச்சனைகளை பார்த்துக்க. பொம்பளைகள் பேரில் எழுதின பத்திரங்களை எல்லாம் ஆடிட்டர் கிட்ட கொடுத்து விடு" என்கிறார் குணசேகரன். 


சக்தியும் ஜனனியும் ஜீவானந்தம் பற்றின விஷயங்களை அவனை சந்திப்பதற்கு முன்னரே தெரிந்து கொள்ள வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . "அவனுடைய பலம் எது பலவீனம் எது என தெரிந்து கொள்ளவேண்டும். அவனோட அமைப்பில் இருக்குறவங்க கிட்ட கேட்டா நமக்கு எதுவும் கிடைக்காது. வேறு ஒரு நபர் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவர் யார் என்பதை நீ நேரில் பார்த்தால் உனக்கு புரியும்" என்கிறாள் ஜனனி. ரேணுகா தான் சக்தியும் ஜனனியும் வீட்டில் இல்லாததை நினைத்து கவலை படுகிறாள். நந்தினி அவர்கள் ஏதாவது வேலை விஷயமாக தான் சென்று இருப்பார்கள் நீங்கள் கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறுகிறாள். 


குணசேகரன் ஊருக்கு கிளம்ப தயாராகி விட்டார். அவருக்கு காபி கொண்டு வந்து கொடுக்க சொல்லி விசாலாட்சி அம்மா ஆர்டர் கொடுக்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.