சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுக்கு ஆடிட்டர் வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அரசு பள்ளிக்கு விசாரிக்க சென்ற ரேணுகா, நந்தினி மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வருகிறார்கள். என்ன சொல்லியும் கேட்காமல் மகளை கொண்டு போய் அரசு பள்ளியில் சேர்த்தது பற்றி நக்கலாக பேசுகிறார் குணசேகரன். என்னிடம் அடிமையாக இருக்க விரும்பவில்லை என சொல்லும் உங்கள் பெயரில் எதற்கு என்னுடைய கம்பெனியின் இயங்க வேண்டும், வந்து இந்த பத்திரத்தில் கையெழுத்து போடுங்கள் என்கிறார். 


 



ஒரு வழியாக எங்களுக்கு விடுதலை கிடைத்தது என சொல்லி கையெழுத்து போட வரும் நந்தினி திடீரெனெ "நான் இப்போ இந்த பத்திரத்தில் கையெழுத்து போட முடியாது என சொன்னால் நீங்க என்ன செய்வீர்கள்" என கேட்கிறாள். அதெல்லாம் அவரால் ஒன்னும் செய்ய முடியாது. அது தான் அடியாள் ஒருத்தன உன்னோட தலையில கட்டி வச்சு இருக்காருல அவனை வைச்சு உருட்டி மிரட்டி கையெழுத்து போட வைப்பார்"  என ரேணுகா சொல்கிறாள். சும்மா தான் கேட்டேன் என சொல்லி நந்தினியும் ரேணுகாவும் கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்கள். சக்தியும் கையெழுத்து போட வேண்டும் என ஆடிட்டர் சொல்கிறார். 



"நாங்களாவது கொஞ்சம் யோசித்தோம் சக்தி உடனே கையெழுத்து போட்டு தூக்கி போட்டு விடுவான். அவன் ரோஷக்காரன் இந்த சொத்துல தான் ஒரு பைசா கூட வேண்டாம் என ஏற்கனவே சொன்னானே " என்கிறாள் நந்தினி. 


கௌதம், ஜீவானந்தத்தை சந்தித்து பட்டம்மாள் குறித்து அவன் சேகரித்த அனைத்து விஷயங்களையும் குணசேகரன் எப்படி குறுக்கு வழியில் சொத்துக்களை சேகரித்தார் என்பது குறித்தும் கூறுகிறான். ஜீவானந்தம் இவை அனைத்தும் தெரிந்த தகவல் அதை தாண்டி எங்களுக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. நாளைக்கு பத்திரம் நமது பெயரில் மாற்றப்படும்போது பட்டம்மாளின் பேத்தி என சொல்லும் ஜனனி வந்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. அதனால் யாருக்கும் சந்தேகம் வராதபடி இயல்பாக ஜனனியுடன் நட்பாகி அவர்கள்  வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்த தகவலை சேகரிக்க சொல்கிறார். கௌதம் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை பார்த்து ஜீவானந்தத்திற்கு சந்தேகம் வருகிறது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவனை அனுப்பி வைத்து விடுகிறார். கௌதம் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறான். போக போக அது என்னவென்று தெரியும் என்கிறார் ஜீவானந்தம். 


 



சக்தியும், ஜனனியும் வீட்டுக்கு வந்ததும் சக்தியை அழைத்து  பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார் குணசேகரன். சக்தியை கையெழுத்து போட விடாமல் ஜனனி தடுக்க கோபமடைகிறார் குணசேகரன். இன்னும் நாலு நாள் தான் உங்க களவாணித்தனத்தை அம்பலப்படுத்துகிறேன் என குணசேகரன் சொல்ல, உங்கள் பிராட் முகத்தை கிழித்து எறிய எனக்கு 24 மணி நேரம் போதும். நீங்கள் யார் உங்களின் குறுக்கு புத்தி என்ன என்பதை இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காண்பிக்க போகிறேன். உங்க தம்பி என்ற பாசத்திலா சொத்தை சக்தி பேர்ல எழுத வச்சீங்க. நாலு பேர் உங்கள பெருமையா பேசணும் அதுக்கு தானே. வீட்டில் இருக்கவங்கள இது என்னோட உழைப்பு, என்னோட சம்பாத்தியம் என சொல்லி காட்டுவீங்க. இந்த பசங்க வரைக்கும் உங்க பேச்சு பாதித்து இருக்கு. உங்க கண்கட்டி வேஷம் இனிமேல் செல்லாது. 


நீ உன்னோட பொண்டாட்டி பேச்சை கேட்க போறியா இல்லை என்னோட பேச்சை கேட்க போறியா என சக்தியை கேட்க சக்தி சிறிதும் தயக்கமின்றி ஜனனிக்கு ஆதரவாக வெளியில் சென்று விடுகிறான். "என்னோட சொத்தை எல்லாருமா சேர்ந்து ஆட்டையை போடலாம் என முயற்சி பண்றீங்களா. இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அந்த கிழவி கழுத்தை நசுக்கி கதையை முடிக்க ஐந்து நிமிஷம் ஆகாது" என குணசேகரன் சொல்ல, "சொத்து கையில் வரும் போது ஜெயிலுக்கு போக போறீங்களா மாமா" என நந்தினி நக்கல் செய்கிறாள். நாங்க வேணும்னா ஜனனி கைல கால்ல விழுந்து கையெழுத்து போட சொல்லட்டுமா என்றதும் கண்டவ கிட்ட நான் ஏன் என்னுடைய சொத்தை கெஞ்சி கேட்டு வாங்கணும் இந்தாம்மா என்றதும் நந்தினி நக்கலாக "இந்தம்மா ஏய்! இந்த குணசேகரன் இன்னொரு முகத்தை இப்போ பாப்பீங்க!" என சொல்லி குணசேகரன் போலவே செருமி காண்பிக்கிறாள் அதை பார்த்த வீட்டில் இருந்த அனைத்து பெண்களுக்கும் சிரிப்பு வந்துவிடுகிறது. கோபமாக மாடிக்கு குணசேகரன் செல்ல அனைத்து ஆண்களும் இடத்தை விட்டு களைந்து செல்கிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.