சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஆதிரை அருண் வீட்டுக்குச் சென்று அருணிடம் பேசி புரிய வைப்பதற்கு முயற்சி செய்கிறாள். ஆனால் அருண் சித்தப்பா காசி அவளை அருணிடம் பேசவிடவில்லை. அருணும் “என் வாழ்க்கையில் ஆதிரை என்ற ஒரு பெண் இனி இல்லவேயில்லை என சொல்லி விடுகிறேன்” என்கிறான். அதைக் கேட்டு மனமுடைந்து திரும்புகிறாள் ஆதிரை. 


 




மறுபக்கம் சென்னையில் வளவனை சந்திக்கச் சென்ற குணசேகரனும் கதிரும் அனைத்தையும் பேசி முடித்துவிடுகிறார்கள். அப்பேது குணசேகரன் தனக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை தனது கைகள் நன்றாக தான் உள்ளது என்றும், ஒரு காரணத்திற்காக தான் அனைவரிடத்திலும் பொய் சொல்லி இருப்பதாகவும் தெரிவிக்கிறார். ஜனனியும் சக்தியும் ஜீவானந்தத்தின் பேக் கிரவுண்ட் குறித்து விசாரிப்பதற்காக தீவிரமாக அலைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


 



மிகுந்த மனவேதனையில் வீட்டுக்கு திரும்பிய ஆதிரையிடம் கரிகாலன் "வா ஆதிரை நாம வீட்டுக்கு போகலாம்" என அழைக்க, அவனைத் தள்ளி விட்ட ஆதிரை "எனக்கு நீ வேண்டாம்" எனக் கத்துகிறாள். உடைந்து போன கரிகாலன் அழுது கொண்டே "இந்த வீட்டில இருக்க எல்லாரும் என்னை கிறுக்கு பயன்னு நினைக்குறாங்க. இந்த கிறுக்கு பயலுக்குள்ளேயும் மனசு இருக்கு ஆதிரை" என்கிறான். மகன் இப்படி உடைந்து பேசுவதைப் பார்த்த ஜான்சி ராணியும் கலங்குகிறாள். அவன் பேசுவதைக் கேட்ட அனைவருக்கும் மிகவும் சங்கடமாகப் போகிறது. விசாலாட்சி அம்மா ஆதிரையை சமாதானம் செய்ய முயற்சி செய்தாலும் ஆதிரை மனம் மாறுவதாகத் தெரியவில்லை.


 



ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் நம்பர் கிடைத்து விட்டதால் அதன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். "நான் குணசேகரன் மனைவி ஈஸ்வரி பேசுறேன்" என ஈஸ்வரி சொன்னதும் ஜீவானந்தம், "இப்போ கூட நான்  பேசுறது நீங்க குணசேகரன் மனைவி என்பதற்காக அல்ல, ஈஸ்வரி என்பதற்காக" என்று சொன்னதும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட். 


ஆதிரையின் முடிவு என்னவாக இருக்கும்? ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் பேசியது எந்த வகையில் குணசேகரனுக்கு சாதகமாக இருக்கும்? ஜனனி சக்தியின் முயற்சியில் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா? வரும் எபிசோடுகளில் இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.  


நாளுக்கு நாள் ஸ்வாரஸ்யம் கூடிக்கொண்டே போகும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்னென்ன ட்விஸ்ட் காத்துகொண்டு இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.