சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் மற்றும் கதிரை கிளம்ப சொல்கிறார் வளவன். "இரண்டு நாட்களுக்கு பிறகு நான் அங்கு வருகிறேன். அதிக நேரம் இங்கே நின்று பேச வேண்டும். உங்கள் வீட்டிலும் இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம்" என்கிறார் வளவன். 


பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம் :


"எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் பற்றி எனக்கு தெரியும் அதனால் யாருக்கும் இது குறித்து தெரியாது. என்னோட தம்பி ஞானத்திடம் கூட இது பற்றி சொல்லவில்லை. அவன் சில நியாயம் தர்மம் எல்லாம் பேசுவான். கதிருக்கு மட்டும் தான் தெரியும். கோயம்புத்தூர் போகிறோம் என சொல்லிவிட்டு சென்னை வந்திருக்கோம்" என்கிறார் குணசேகரன்


 



"ஏற்கனவே என் குறியில் இருந்து ஜீவானந்தம் தப்பித்து விட்டான். இப்போது உங்களையும் ஏமாற்றியுள்ளான். நாம இரண்டு பெரும் சேர்ந்துள்ளோம் என தெரிந்தால் அவன் உஷாராகிவிடுவான். அவன் என் கையால் தான் போகணும் என விதி இருக்கு" என்கிறார் வளவன்.


உண்மையை உடைத்த குணசேகரன் :


அந்த நேரம் பார்த்து குணசேகரன் வலது கையை அசைத்து பேச வளவன் கை அசையுது என கேட்கிறார். உடனே குணசேகரன் "கைக்குகெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு  காரணமாக தான் இப்படி சொல்லி வைத்துள்ளேன். கையில சொத்தை வாங்குற வரைக்கும் இப்படி மடக்கி தான் இருக்கும்" என்கிறார். அதை பார்த்து கதிர் நிம்மதி அடைகிறான். மூவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். 


 


கெஞ்சி கெடுக்கும் ஆதிரை :



சக்தியும் ஜனனியும், ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொள்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் ஆதிரை அருண் வீட்டுக்கு செல்கிறாள். அருண் ஆதிரையை பார்த்து ஷாக்காகிறான். அந்த நேரத்தில் அங்கு வந்த அரசு ஆதிரையை விரட்டுகிறார். ஆனாலும் ஆதிரை ஒரு இரண்டு நிமிஷம் அருணிடம் பேசிவிட்டு போகிறேன் என கெஞ்சுகிறாள். அரசு விடாப்பிடியாக "உங்க அண்ணன் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தான். நீ என்னுடைய தம்பியை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டாய். நல்ல வேலை இந்த கல்யாணம் நடக்கவில்லை" என ஆதிரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறான். 


 



அருண் சொன்ன முடிவு :



ஆதிரை அருணை சொல்ல சொல்லுங்கள் என்கிறாள். அருகில் இருந்த சாருபாலாவும் அருண் சொல்வது தான் சரி அதனால் அவனே ஒரு முடிவு எடுத்து வாயை திறந்து ஒரு பதிலை சொல்லட்டும் என்கிறார். அரசு அருண் காலை இழந்ததை பற்றி சொன்னதும் ஷாக்காகிறாள் ஆதிரை. இதற்கு எல்லாம் நீ தான் காரணம். நீ ராசியில்லாதவள் என ஆதிரையை சொன்னதும் சாருபாலா "இப்படியெல்லாம் பேசாதீர்கள். அவங்க அண்ணன் தப்பு பண்ணது பற்றி நீங்கள் சொன்னது சரி தான் ஆனால் இப்படி காயப்படுவதற்கு நமக்கு உரிமை கிடையாது" என அரசை அடக்கி விடுகிறார். 



"ஆதிரை என்ற ஒரு பொண்ணு இனிமே என்னோட லைஃப்ல இல்லை" என சொல்லி விட்டு ரூமுக்கு சென்று விடுகிறான் அருண். ஆதிரை எவ்வளவு கெஞ்சியும் அவன் வரவில்லை. சாருபாலாவும் 'இனி மேல் அருணை நாங்கள் இழக்க முடியாது. நீ கிளம்பு" என சொல்லிவிடுகிறார். வேறு வழியின்றி வெளியில் வந்து அழுகிறாள் ஆதிரை. அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.