சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவை காணவில்லை என குணசேகரன் வீடு முழுக்க தேடியும் அப்பத்தா கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள அனைவரும் குணசேகரன் தான் கதிர் மூலம் அப்பத்தாவை ஒளித்து வைத்து கொண்டு நாடகம் ஆடுகிறார்கள் என நினைக்கிறார்கள்.

ஆனால் அப்பத்தா படு ஸ்பீடாக நீதிபதியிடமே சென்று மிரட்டி ஜீவானந்தத்திற்கு எதிராக வாக்குமூலம் வாங்கியதை பற்றி சொல்கிறார்.  நீதிபதியும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை கண்டித்து இந்த வாக்குமூலத்தை ரத்து செய்கிறேன் என சொல்லிவிடுகிறார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க வேறு ஒரு புதிய இன்ஸ்பெக்டரை நியமிக்க ஆணையிடுகிறார். ஜனனி, ஜீவானந்தம் மற்றும் பட்டம்மாள் சந்தோஷப்படுகிறார்கள்.


 




குணசேகரனும் தகவல் அறிந்து நீதிபதியின் வீட்டுக்கு வர அங்கே அப்பத்தா, ஜனனி, ஜீவானந்தம் இருப்பதை பார்த்து டென்ஷனாகிறார். அவர்களை அழிக்காமல் நான் அழிய மாட்டேன் என சவால் விடுகிறார். பட்டம்மாள் ஜீவானந்தத்தோடு காரில் ஏறி சென்று விடுகிறார். வக்கீலும் ஆடிட்டரும் அவசரப்படாமல் அமைதியாக இருக்க சொல்லி குணசேகரனிடம் சொல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 26ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.



குணசேகரனோடு காரில் வக்கீலும் ஆடிட்டரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஞானம் இனிமேல் என்ன செய்வது என அவர்களிடம் யோசனை கேட்கிறான். "அவங்க இரண்டு போரையும் அவ்வளவு சீக்கிரம் ஒன்னும் செய்யமுடியாது" என வக்கீல் சொல்லவும் குணசேகரன் திரும்பி பார்த்து அவர்களை முறைத்துவிட்டு "ஞானம் காரை ஓரமாக நிப்பாட்டு" என்கிறார். ஆடிட்டரும் வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கிறார்கள்.  



அங்கு வீட்டில் கதிர் போன் அடித்து கொண்டே இருக்கிறது. அதனால் சக்தி எடுத்து பேசுகிறான். "டேய் கதிர்... ஜீவானந்தம் பயல உங்க பேச்ச கேட்டு சுட்டேனா இல்லையா. பிளான் மிஸ்ஸாகி அவன் பொண்டாட்டி செத்து போயிட்டா.." என் வளவன் உளறி விடுகிறான். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்களுக்கு இருந்த சந்தேகம் இந்த போன் கால் மூலம் உறுதியாகிவிட்டது. இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.




ஜனனி தனக்கு தெரிந்த உண்மையை ஜீவானந்தத்திற்கு தெரிவிப்பாளா? அப்பத்தாவின் அடுத்த பிளான் என்ன? கிள்ளிவளவன் வேறு என்னென்ன விஷயங்களை உளறினான்? மிகவும் பரபரப்பாக நகரும் எதிர் நீச்சல் தொடரில் அடுத்து வரப்போகும் கதைக்களம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் எதிர் நீச்சல் ரசிகர்கள்.