சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவை காணவில்லை என குணசேகரன் அனைவரிடமும் கத்தி கொண்டு இருக்கிறார். சக்தி மீதும் ஜனனி மீதும் பழியை போடவே இந்த பதுக்கி வைக்கிறது, பழிவாங்குறது எல்லாம் உங்க புத்தி என குணசேகரனை பார்த்து சொல்கிறாள் ஜனனி. பிறகு குணசேகரனும், ஞானமும் காரில் ஏறி அப்பத்தாவை தேடுவதற்காக செல்கிறார்கள். 


"சொத்து கையில் வரும் வரையில் அப்பத்தாவை இவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள். அதுவாவே எந்திரிச்சு எங்கயாவது போய் இருக்கும்"  என ரேணுகா சொல்கிறாள். எதையோ யோசித்த ஜனனி திடீரென யாரிடமும் சொல்லாமல் வேகவேகமாக போகிறாள். 



பட்டம்மாள் நீதிபதியின் வீட்டிற்கு சென்று அவரிடம் நடந்ததை பற்றி சொல்கிறார். தன்னுடைய கல்யாணம் பற்றியும் மகன் இறந்த பிறகு பேரனுக்காக தன்னுடைய சொத்துக்களை விற்று ஐந்து லட்சம் பணம் கொடுத்ததையும் பற்றி சொல்கிறார். அதனால் குணசேரன் சொத்தில் 40% ஷேர் தன்னுடையது என்பதை பற்றியும் சொல்லி அதை எப்படி குணசேகரன் ஆதிரையின் திருமணத்தை காரணம் காட்டி தன்னிடம் இருந்து பறித்தது  பற்றியும் நீதிபதியிடம் சொல்கிறார். 


பட்டம்மாள் பேசிக்கொண்டே இருக்கும் போது ஜனனியும், ஜீவானந்தமும் அங்கே வந்து விடுகிறார்கள். நீதிபதி ஜீவானந்தத்தை பார்த்து "பல முறை உங்களை பற்றி கேள்வி பட்டுளேன். ஆனால் நல்ல விதமாக கேள்விப்பட்டது இது தான் முதல் முறை" என்கிறார். அப்பத்தாவை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிய இன்ஸ்பெக்டரை நீதிபதி கடுமையாக கண்டிக்கிறார். உங்களை போன்ற ஒரு சிலரால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர்.



பட்டம்மாள் கொடுத்துள்ள இந்த வாக்குமூலத்தை நான் ரத்து செய்கிறேன். அவர்கள் இப்போது என்னிடம் சொல்லியதை வைத்து புதிய வாக்குமூலத்தை தயார் செய்யுங்கள். இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய புதிதாக வேறு ஒரு இன்ஸ்பெக்டரை  நியமிக்கிறேன் என கூறுகிறார் நீதிபதி. அதை கேட்ட ஜீவானந்தம், பட்டம்மாள் மற்றும் ஜனனி சந்தோஷப்படுகிறார்கள். பட்டம்மாளிடம் "நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் பேரன் மீது நீங்கள் புகார் அளிக்கலாம். அதையும் நாங்கள் விசாரிக்கிறோம்" என்றார் நீதிபதி. அந்த நேரத்தில் ஆடிட்டர் மற்றும் வக்கீல் கொடுத்த தகவலின் படி குணசேகரனும் ஞானமும் நீதிபதியின் வீட்டுக்கு வருகிறார்கள். அப்பத்தா, ஜனனி மற்றும் ஜீவானந்தம் மூவரும் வெளியே வர அவர்களை முறைத்து கொண்டு இருக்கிறார் குணசேகரன். "இந்த கிழவியை வெளியே அனுப்பி வைச்சுட்டு எனக்கு தெரியாதுன்னு நடிக்கிற" என ஜனனியை திட்ட "போதும் நிறுத்து குணசேகரா. நான் இங்க வந்ததுக்கு பிறகு மெசேஜ் பண்ணி ஜனனியை இங்க வரச்சொன்னேன்" என்கிறார் அப்பத்தா. 



"என்னை பழிவாங்குறியா. நான் அழிவதற்கு முன்னாடி உங்க எல்லாரையும் அழிச்சுட்டு தான் அழிவேன்" என்கிறார் குணசேகரன். "ஜீவானந்தம் அவருடைய மனைவியை பறிகொடுத்துவிட்டு இங்கே எனக்காக தான் வந்துள்ளார். அவர் மனைவியை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டார்" என்கிறார் அப்பத்தா. இன்ஸ்பெக்டர் "இங்கே எதுவும் பேசாதீங்க கிளம்புங்க இது நீதிபதியின் வீடு" என்கிறார். 


அப்பத்தா, ஜனனி மற்றும் ஜீவானந்தம் அங்கே இருந்து கிளம்புகிறார்கள். ஜனனி அப்பத்தாவை பார்த்து அழுகிறாள். அப்பத்தா "நான் தான் வந்துட்டேன் இல்ல இனிமேல் நான் பாத்துக்குறேன். ஜீவானந்தமும் இருக்கிறார் நீ தைரியமாக இரு" என ஜனனியை அனுப்பிவிட்டு ஜீவானந்தத்துடன் காரில் ஏறி செல்கிறார் அப்பத்தா. இதை பார்த்த குணசேகரன் காண்டாகிறார். அவரை சமாதானம் செய்து வக்கீல் அனுப்பி வைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.