சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் போய் குணசேகரனிடம் பேசுகிறார். "நீங்க உடம்பு சரியில்லாமல் போவதற்கு முன்னால் இருந்த நிலை இப்போது இல்லை. உங்களுடைய மொத்த சொத்தையும் வேறு ஒருவர் அபகரித்துவிட்டார். நீங்க சொல்ல போற வார்த்தையில் தான் உங்களுடைய வாரிசுகளுடைய எதிர்காலமே அடங்கி இருக்கு" என்கிறார். 



குணசேகரன் அதே ஆவேசமாக பேசிக்கொண்டே இருக்கிறார். "அந்த தாடிக்காரன் யாரு? அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டு சொல்லுங்க. இந்த வீட்ல இருக்கும் யாரு மேலையும் இல்லாத அக்கறை அவன் மேல எப்படி வந்தது என கேட்டு சொல்லுங்க" என கத்திக்கொண்டே இருக்கிறார். ஆடிட்டரும் வக்கீலும் "உங்களுடைய சொத்து அனைத்தையும் ஜீவானந்தம் அவனுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டு விட்டான்" என சொன்னதும் பட்டம்மாள் முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்படுகிறது. 


அப்பத்தா வாயை திறந்து "ஜீவானந்தம் யாரையும் ஏமாத்த மாட்டாரு. அவர் செஞ்சது அத்தனையும் எனக்காகத்தான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் அவரை சந்தித்தேன். நம்ம வீட்ல 40% ஷேர் பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போதுதான் எதிர்பாராத விதமா சந்தித்தேன். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு என்னுடைய பிரண்டை சந்திக்க சென்றேன். 



வாடகை காரில் தான் சென்றேன். அப்போது கார் டயர் பஞ்சரானதால் டிரைவர் மெக்கானிக் கடைக்கு போய் அழைத்து வருகிறேன் என சொல்லிவிட்டு காரை லாக் செய்து விட்டு சென்றுவிட்டான். அப்போது எனக்கு ஏதோ வித்தியாசமான வாசனை வந்தது. என்னால் மூச்சு விடமுடியாமல் போனது. சாகும் நிலைக்கு சென்று விட்டேன். அப்போது ஜீவானந்தம்தான் கார் லாக்கை உடைத்து என்னை காப்பாற்றினார். 


அவரிடம் பேசும்போது தான் அவருடைய நோக்கமும் என்னுடைய நோக்கமும் ஒரே மாதிரி இருப்பது தெரியவந்தது. நான் என்னுடைய பிரச்சினை பற்றி சொன்னதும் எனக்கு உதவுவதாக அவர் சொன்னார். எத்தனை நாட்கள் தான் இந்த பொண்ணுங்க எல்லாரும் இவனுக்கு அடிமையா இருக்கும். என்னுடைய நோக்கம் தப்பா? நீங்க எல்லாரும் போராடி வெளியே வரவேண்டும். அவரு ரொம்ப நல்லவரு. அவர் மேலே கேஸ் எல்லாம் போடாதீங்க. அவர் தான் என்னுடைய உயிரை காப்பாற்றிவிட்டார். அவருக்கு நான் என்றும் நன்றி உணர்வோடு இருப்பேன்" என கேட்கிறார். 


இதை கேட்டதும் குணசேகரன் மேலும் வெறி கொண்டு போய் கத்துகிறார். வக்கீலும் ஆடிட்டரும் அம்மாவை ஏமாற்றி தான் கையெழுத்து வாங்கினான் என அவங்க போலீஸ் முன்னாடி சொல்லிவிட்டால் எல்லா சொத்தையும் நாம மீட்டுவிட முடியும் என்கிறார்கள். "போலீசை வீட்டுக்கு வரவைத்து இந்த கிழவியிடம் இருந்து நான் கையெழுத்து வாங்கி தருகிறேன்" என சொல்கிறார். 



ஞானம் அப்பத்தாவிடம் உண்மையை சொல்ல சொல்லி திரும்ப திரும்ப கேட்கிறான். குணசேகரனிடம் "கொஞ்சம் பொறுமையா இருங்க அண்ணன். அவசர பட்டுத்தான் இந்த நிலைமையில் இருக்கிறோம்" என்கிறான். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஞானம் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்து வரச் சொல்கிறான். 


கவுஞ்சியில் ஜீவானந்தம் மிகவும் சந்தோஷமாக மனைவி குழந்தையுடன் விளையாடி கொண்டு இருக்கிறார். கதிர் மற்றும் வளவன் ஆட்கள் ஜீவானந்தம் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள்.  "டேய் இன்னிக்கு இவனோட கதையை முடிக்கணும் டா" என சொல்லிக்கொண்டே நுழைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.