சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் பட்டம்மாள் கோமாவில் இருந்து கண் முழிக்கிறார். தட்டுத் தடுமாறி எழுந்து வெளிய வந்த அப்பத்தாவை பார்த்த தர்ஷினி சென்று அனைவரிடமும் "பெரிய அப்பத்தா எழுந்துட்டாங்க" என சொல்கிறாள். அனைவரும் அப்பத்தா கண் முழித்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். 


 



அப்பத்தாவுக்கு நினைவு இருக்கிறதா எனத் தெரியவில்லை, ஆனால் அனைவரையும் சுத்தி முத்தி பார்க்கிறார். ஞானம் குணசேகரனுக்கு தகவல் சொல்ல, குணசேகரன் உடனே வீட்டுக்கு விரைகிறார். அப்பத்தா எழுந்து உட்கார்ந்து இருப்பதை பார்த்து வாய்க்கு வந்த படி கத்துகிறார். அனைவரும் அவரை கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்க சொல்லி சொன்னாலும், எதையும் காதில் வாங்காமல் வெறி பிடித்தது போல “எனக்கு சொத்து வேணும் வாயை திறந்து பேசு அப்பத்தா கிழவி” என அநாகரீகமாக கத்துகிறார். 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் தொடருக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


 



ஜீவானந்தம் தன்னுடைய வீட்டுக்கு வந்து மகள் வெண்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார். ஜனனி ஒரு பக்கம் ஜீவானந்தம் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறாள். ஜீவானந்தம் மனைவி கயல்விழி கணவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறாள். "வெண்பாவை நினைக்கும் போது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ உங்கள ரொம்ப மிஸ் பண்ணறா" என்கிறாள் கயல்விழி. ஜீவானந்தமும் மகளை நினைத்து வருந்துகிறார். 


 



குணசேகரன் புலம்பல் இன்னும் நிற்கவில்லை. "வீட்டில் இருக்கும் எல்லா பொம்பளைகளும் கிரிமினலா இருந்தா, எத்தனை கிரிமினல் கூட தான் வாழறது ஒரு மனுஷன். 80 வயசு கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயசு தாராவுக்கும் பயப்படுறதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிறேன்" என்கிறார். அனைவரும் அவர் பேசுவதை கேட்டு எரிச்சல் அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 


 



ஜனனி ஜீவானந்தம் வீட்டைக் கண்டுபிடித்தாளா? கதிர், வளவன் என்ன ஆனார்கள்? ஜீவானந்தம் மகள் விஷயத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? அப்பத்தா ஏதாவது உண்மையை சொல்வாரா? அல்லது அவருக்கு எதுவும் நினைவில் இல்லையா? இந்த கேள்விகளுக்கு இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் விடை கிடைக்கும். நாளுக்கு நாள் எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறிக் கொண்டே வருகிறது.