சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனி ஒரு பக்கமும், கதிர், வளவன் மற்றும் அடியாட்கள் மறுபக்கமும் ஜீவானந்தம் வீடு நோக்கி வேகமாக செல்கிறார்கள்.
குணசேகரன் வீட்டில் அப்பத்தா கண்முழித்து பார்க்கிறார். அவருக்கு எதுவும் புரியவில்லை. அனைத்தையும் கழட்டி எரிந்து மிகவும் கஷ்டப்பட்டு பெட்டில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. கால்களை மெதுவாக ஊன்றி எப்படியோ எழுந்து வெளியே செல்கிறார். ஹாலில் குழந்தைகள் மூவரும் படித்து கொண்டு இருக்கிறார்கள். தர்ஷினி அப்பத்தா எழுந்ததை பார்த்து வேகவேகமாக கீழே சென்று அனைவரிடமும் பெரிய அப்பத்தா எழுந்த விஷயத்தை சொல்லி வர செல்கிறாள்.
அனைவரும் ஓடி வந்து அப்பத்தாவை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அவரை உட்கார வைத்து தண்ணீர் கொடுக்கிறார்கள். அனைவரையும் அப்பத்தா பார்க்கிறார் ஆனால் அவருக்கு அவர்களை நினைவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. குழப்பத்துடனே பார்த்து கொண்டு இருக்கிறார் ஆனால் எதுவும் பேசவில்லை. ஜனனியை தான் தேடுகிறார் என நினைத்து ஜனனி வெளியே போய் இருக்கிறாள் வந்துவிடுவாள் என்கிறார்கள். நந்தினி ஓடிப்போய் ஈஸ்வரியிடம் அப்பத்தா கண்முழித்த விஷயத்தை சொல்கிறாள். ஈஸ்வரியும் சக்தியும் சந்தோஷப்படுகிறார்கள்.
ஞானம், குணசேகரனுக்கு போன் மூலம் அப்பத்தா எழுந்ததை பற்றி சொல்லி சீக்கிரமாக வீட்டுக்கு வரச்சொல்கிறான். வீட்டுக்கு வந்த குணசேகரன் நேரடியாக அப்பத்தாவை பார்த்து வாய்க்கு வந்தபடி கத்துகிறார். "முழிச்சுட்டியா... இன்னும் நீ சாகலையா... என்னை என்ன பாடுபடுத்திட்டே. சொத்து, சுகம், தூக்கம் எல்லாமே உன்னால தான் போயிடுச்சு. மகராசி மாதிரி மதுரையில வாழ்ந்தேன். என்ன பித்து புடிச்சு பைத்தியம் மாதிரி அலைய விட்டுட்ட" என பயங்கரமாக சத்தம் போடுகிறார்.
"உடம்பு முடியாதவங்க இப்ப தான் எழுந்து உட்கார்ந்து இருக்காங்க. அவங்க முதல சரியாகட்டும். பொறுமையா இருங்க. திரும்பவும் அவங்களுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது" என நந்தினி, ரேணுகா, விசாலாட்சி அம்மா என அனைவரும் சொல்றாங்க அப்படியும் குணசேகரன் வாயை மூடுவது போல தெரியவில்லை. ஞானத்திடம் சொல்லி ஆடிட்டரையும், வக்கீலையும் வர சொல்லி சொல்கிறார்.
"ஏன் இப்படி வெறி பிடிச்சு கத்துறீங்க. நீங்க கத்துறது எங்களாலே தாங்க முடியல. அப்பத்தாவுக்கு ஏதாவது ஆக போகுது" என நந்தினி சொல்கிறாள். "ஏய் அப்பத்தா கிழவி வாயை திறந்து பேசு பேசு" என கத்துகிறார் குணசேகரன்.
"ஹாஸ்பிடலில் இருப்பது போல டாக்டர், நர்ஸ் என எல்லா வசதியும் செய்து கொடுத்து ஷிபிட் போட்டு பார்த்துக்க வச்சு கை காலை எல்லாம் அமுக்கிவிட்டேன்" என்கிறார் குணசேகரன். "இதெல்லாம் சொத்துக்காக தானே செஞ்சீங்க. அப்போ கொஞ்ச நேரம் அமைதியா இருங்க" என்கிறாள் நந்தினி. அனைவரும் குணசேகரனை வாயை மூடிட்டு அமைதியா இருங்க என திரும்ப திரும்ப அதையே தான் சொல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.