சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் இன்றைய எபிசோடில் குணசேகரன் அப்பத்தாவை வாயைத் திறந்து உண்மையை சொல்லு சொல்லு என கத்திகொண்டே இருக்கிறார். "எனக்கு சொத்து தான் முக்கியம். இந்த வீட்டில் யாரையும் நம்பவே முடியாது. தூங்கும்போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். என்னை சுத்தி எல்லாரும் கிரிமினல்களா இருந்தா நான் என்ன பண்ணமுடியும்.? 80 வயசு கிழவியில் இருந்து 8 வயசு தாரா வரைக்கும் எல்லாருக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு" என புலம்பிக்கொண்டே இருக்கிறார்.


பொறுமையாக இருங்கள் என யாரவது சொன்னால் வெறி பிடித்து போல எகிறிக்கொண்டே போகிறார். ஞானத்திடம் சொல்லி ஆடிட்டரும் வக்கீலையும் சீக்கிரமா வரச்சொல்லி சொல்கிறார்.



மறுபக்கம் ஜீவானந்தம் மகள் வெண்பா அப்பாவுக்காக வீட்டுக்கு வெளியிலேயே காத்துகொண்டு இருக்கிறாள். வீடு முழுக்க அப்பாவின் புகைப்படங்களையும் வாழ்த்துக்களையும் வரைந்து ஒட்டி வைத்துள்ள வெண்பா. ஜீவானந்தம் வந்ததும் ஒளிந்து இருந்து மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.


வெண்பாவுக்கு அப்பா பரிசெல்லாம் வாங்கி வந்து இருக்கிறார் ஆனால் வெண்பாவின் ஒரே ஆசை அவளின் அப்பா எப்போதுமே அவளுடனே இருக்க வேண்டும் என்பது தான், என சொல்கிறார் ஜீவானந்தம் மனைவி கயல்விழி. மகளுடன் ஜீவானந்தம் விளையாடும் போது துப்பாக்கி கீழே விழுந்து விடுகிறது. இது எதற்கு தேவை இல்லை என வெண்பா ஜன்னல் வழியாக கீழே தூக்கி எறிந்து விடுகிறாள்.


 




கயல்விழி  ஜீவானந்தத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். "வெண்பா உங்களை ரொம்ப மிஸ் பண்றா. அவ மட்டும் இல்லை நானும் தான். ஒரு போராளியின் மனைவி என்றால் குடும்பம் குழந்தை இதற்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது என்பதை தெரிந்து தான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொண்டேன். உங்களின் வெளியுலகம் இந்த அழகான உலகத்தை பாதித்து விட கூடாது என்பதற்காக தான் எங்களை இங்கே தனியாக வைத்து இருக்குறீர்கள் என்பதை சீக்கிரமே வெண்பா புரிந்து கொள்வாள்" என்கிறாள் கயல்விழி



ஜனனி மலை மீது எற முடியாமல் சிரமப்பட்டு ஏறி வருகிறாள். மறுபக்கம் கதிர், வளவன் மற்றும் அடியாட்கள் ஜீவானந்தம் வீட்டைத் தேடி வருகிறார்கள். குணசேகரன் ஆடிட்டருக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். தர்ஷினி குணசேகரனை எதிர்த்து "நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க அப்பா. எல்லாரோட உரிமையிலும் தலையிடுறீங்க" என சொன்னதும் அவளை அடிக்க கை ஓங்குகிறார். "அவரே வெறிபிடிச்சு போய் இருக்காரு நீ அமைதியா இரு" என தர்ஷினியிடம் சொல்கிறார்கள்.  



ஆடிட்டர் வந்ததும் "பாருங்க சார்... எப்படி எழுந்து உட்கார்ந்து கொண்டு இருக்கான்னு. இப்போ கிழவி மட்டும் வாயை திறக்கலை வக்கீல் சொத்துக்காக கேஸுக்காக வாதாடுறதுக்கு பதிலா, கொலை கேஸுக்கு வாதாட வேண்டி இருக்கும்" என்கிறார் குணசேகரன். "நீங்க அமைதியா இருங்க நான் பேசுறேன்" என ஆடிட்டர் சொல்லி பட்டம்மாளிடம் சென்று "நான் ஆடிட்டர்" என்று சொன்னதும் அப்பத்தா புரியாமல் பார்க்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.