சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் கவுஞ்சிக்கு சென்றுள்ள ஜனனி, ஜீவானந்தம் பற்றி விசாரிக்க சக்தியின் நண்பர் சொன்ன இடத்திற்கு வந்து விசாரிக்கிறாள். அவர்கள் அப்படி யாரும் இல்லை என சொல்லி கிளம்ப சொல்கிறார்கள் ஆனால் ஜனனி விடாப்பிடியாக நான் ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொள்ளாமல் இங்கு இருந்து நகர மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாள்.
ஜனனியிடம் கடுமையாக பேசிய நபர் முறைத்துக்கொண்டு அங்கிருக்கு செல்ல இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த ஒரு பெரியவர் ஜனனியிடம் சென்று உங்களுக்கு உதவ தான் கூப்பிடுறேன் என சொல்லி ஜனனியை அழைக்கிறார்.
மறுபக்கம் கதிரும், வளவனும் கவுஞ்சி வந்து விட்டார்கள். கதிர் வளவனிடம் திட்டம் பற்றி கேட்கிறான். "எதையும் முழுமையாக விசாரிக்காமல் நான் களத்தில் இறங்க மாட்டேன். அவனோட அடுத்த பிளான் என்னவாக இருக்கும் என்பதை பற்றி தான் நாங்கள் யோசித்து தான் பிளான் பண்ணுவோம்" என வளவன் சொல்கிறார். விடாமல் வளவனை கதிர் கேள்விகேட்டு கொண்டே வர ஒரு கட்டத்தில் கதிர் வண்டவாளத்தை எல்லாம் ஒன்னுஒண்ணாக அவுத்து விட தொடங்குகிறார் வளவன். இதையெல்லாம் கேட்டு வாயடைத்து போகிறான் கதிர்.
மறுபக்கம் அந்த பெரியவர் ஜனனியிடம் "நீ இந்த ஊரில் எத்தனை நாட்கள் இருந்தாலும் ஜீவானந்தம் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஜீவானந்தத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல நியாயம் தருமத்திற்கு கட்டுப்பட்டவர்கள். போலீஸ், ரவுடி என யார் வந்து கேட்டாலும் பயப்படமாட்டார்கள். மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். ஜீவானந்தம் நியாயத்துக்கு எதிரா எதுவுமே செய்யமாட்டான்" என்கிறார் அந்த பெரியவர்.
"உங்கள மாதிரி பெரியவர் கிட்ட இருந்து சொத்துக்களை பிடிங்கி தன் பெயரில் வைத்து கொள்வது தான் நியாயம் தர்மம் என்கிறீர்களா?" என்கிறாள் ஜனனி. "ஜீவானந்தம் என்னுடைய தூரத்து சொந்தம் தான் ஆனால் நினைத்த நேரத்தில் எல்லாம் அவனை பார்க்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. அவன் இங்க வரும்போது தகவல் வரும். இந்த கிராமத்துக்கே உதவுற கடவுள்" என்கிறார் பெரியவர். ஜனனி ஒரே ஒரு முறை மட்டும் நான் அவரை சந்திக்க வேண்டும். சந்திக்காமல் நான் இந்த ஊரில் இருந்து கிளம்ப மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாள். அந்த பெரியவர் இன்றைக்கு ஒரு நாள் என்னுடைய வீட்டில் வந்து தங்கிக்கொள் என ஜனனியை அழைத்து செல்கிறார்.
குணசேகரன் வீட்டில் மிகவும் குழப்பமாக இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருக்கிறார். அந்த சமயம் விசாலாட்சி அம்மா கதிர் எங்க காணும் என் கேட்கிறார். நந்தினியும் வந்து "என்னோட புருஷனை எங்கே அனுப்பி வைத்து இருக்கீங்க. அதை கேட்க எனக்கு உரிமை இல்லையா? புருஷன் பொண்டாட்டி இடையே நீங்க வந்து மூக்கை நுழைக்காதீங்க நாட்டாமை பண்ணாதீங்க" என சொல்கிறாள். கடுப்பான குணசேகரன் ”என்னோட தம்பியை எங்க வேணாலும் அனுப்புவேன் அதை கேட்க உரிமை இல்லை” என்கிறார். தாரா "என்னுடைய அப்பா எங்க என கேட்க எனக்கு உரிமை இல்லையா?" என்கிறாள். அவளையும் திட்டி அவளின் வளர்ப்பையும் குணசேகரன் திட்டியதால் கோபமான நந்தினி திரும்ப பேச அவளை அடிக்க கை ஓங்குகிறார் குணசேகரன். விசாலாட்சி அம்மா வந்து தடுக்கிறார்.
குணசேகரன் மிகவும் மோசமாக நந்தினியை பேச கொந்தளிக்கிறாள் நந்தினி. ”நான் நினச்சு இருந்தா அவனை உங்களுக்கு எதிரே திருப்பி இருக்க முடியும். அவன் வரட்டும் இங்க நடந்த அனைத்தையும் சொல்கிறேன். அவன் யார் பக்கம் இருக்கிறான் என்பதை பார்க்கலாம்” என சவால் விடுகிறாள். குணசேகரன், ”உன்னுடைய புருஷன் என்னுடைய வேட்டை நாய் அதை தெரிஞ்சுக்கோ. நான் என்ன சொன்னாலும் வால் ஆட்டிகிட்டு நிப்பான்” என சொல்லிவிட்டு செல்கிறார். ”வேட்ட நாய்க்கு வெறி புடிச்சா எப்படி கடிச்சு வைக்கும் என பார்க்கத்தானே போறீங்க” என சொல்லிவிட்டு உள்ளே சென்று அழுகிறாள் நந்தினி. அவளை ரேணுகா சமாதானம் செய்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.