Independence Day 2023: சுதந்திர தின விழாவுக்கு ஜீ தமிழ் சேனலில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள்? - வாங்க பார்க்கலாம்..!

சுதந்திர தின விழாவான ஆகஸ்ட் 15-ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன? என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Continues below advertisement

அதே போல் சிறப்பு விடுமுறை தினங்களில் தொலைக்காட்சி சேனல்களில் மாறுபட்ட நிகழ்ச்சிகள், புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கமான ஒன்று, அந்த வகையில் வரும் சுதந்திர தின விழாவான ஆகஸ்ட் 15-ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பார்க்கலாம். 

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் இளைய தலைமுறைக்கு சுதந்திரத்தின் அருமை தெரிந்திருக்கிறது, தெரியவில்லை என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த பட்டிமன்றத்தில் பர்வீன் சுல்தானா, மோகன சுந்தரம், சாந்தமணி, ஷியாம்லா ரமேஷ் பாபு, ஆர் ஜே அனந்தி, சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அடுத்ததாக காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை கோஷ்டி திரைப்படம் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ஊர்வசி, ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மயிலசாமி, உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். இருபது வருடத்துக்கு முன் தன் தந்தையிடமிருந்து தப்பி சென்ற ரவுடியை கைது செய்ய துடிக்கிறார் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால். ஒரு கட்டத்தில் அவன் கையில் பிடிபட்டும் தப்பிச் செல்கிறான். அவனை துரத்திச் செல்லும்போது மர்மநபர் ஒருவனை சுட்டு விடுகிறார் காஜல். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை காமெடி, பேய் கலாட்டவுடன் பேசும் படம் தான் கோஷ்டி.

இந்த படத்தை தொடர்ந்து மதியம் 1.30 மணி முதல் 4.30 மணி வரை கெளதம் கார்த்திக், விஜய் டிவி புகழ், ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் ஹஸ்டன், போஸ் வெங்கட், நீலிமா ராணி, ஜேசன் ராவ், மதுசூதனன் ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற ஆகஸ்ட் 16,1947 என்ற திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

பிரிட்டிஷ் அதிகாரியான ராபர்ட் கிளைவ் திருநெல்வேலியை அடுத்துள்ள செங்காடு கிராமத்தில் இருக்கும் மக்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வர நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது, ஆனால் இந்த தகவலை மக்களுக்கு சொல்லாமல் மறைந்து தொடர்ந்து வேலை வாங்கி கொடுமைப்படுத்தி வர அதன் பிறகு என்ன நடக்கிறது? கெளதம் கார்த்திக் என்ன செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன்.

இதனை தொடர்ந்து 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் தமிழா தமிழாவின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது. சமைக்க தெரியாத பெண்கள் Vs சமைக்க தெரிந்தவர்கள் என சீரியல் பிரபலங்கள், யூ ட்யூப் சேனலில் குக்கிங் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இப்படி புத்தம் புதிய திரைப்படங்கள், மாறுபட்ட நிகழ்ச்சிகளுடன் இந்த சுதந்திர தினத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.

Continues below advertisement