சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் முந்திக்கொண்டு டி.ஆர்.பி ரேட்டிங்கின் வரிசையின் படி முதல் இடத்தை  எதிர் நீச்சல் சீரியல் தொடங்கிய நாள் முதல் தக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் எதிர் நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வத்தின் கதை சொல்லல் ஸ்டைல் ஒரு முக்கியமான காரணம் என்றாலும் அதை காட்சியில் தத்ரூபமாக கொண்டு வரும் நடிகர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். குறிப்பாக ஆதி குணசேகரன், நந்தினி, ரேணுகா, கரிகாலன் நடிப்பு அபாரமாக உள்ளது என ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகிறார்கள். 



அந்த வகையில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஜனனி சக்தியை பிரிந்து குணசேகரன் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, சக்தியின் ஜோடியாக புதிதாக என்ட்ரி கொடுத்தவர்தான் ஹேமா தயாள். உனக்கு ஜனனி வேண்டாம், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறேன் என சொல்லி சிங்கப்பூரில் இருந்த படித்த பெண்ணாக சக்திக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து திருமணம் வரை கொண்டு சென்றவர் குணசேகரன். அந்த தருணத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர்தான் ஹேமா தயாள். இந்த கதாபாத்திரம் குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் பேசி இருந்தார். அப்போது ஒரு ரகசியத்தை பற்றியும் அவர் சொல்லியிருந்தார். அந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  


"அந்த சமயத்தில் எனக்கு வாய்ப்பை கொடுக்கிறார்கள். அதை நான் எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே நினைத்து செய்தேன். அந்த வாய்ப்பு மூலம் வேறு ஏதாவது வாய்ப்புகள் எதிர்காலத்தில் வர சான்ஸ் இருக்கிறது என்பதை நினைத்து தான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். அதனால்தான் நான் அவர்கள் கண்ணில் கூட பட்டு இருக்கலாம். திருச்செல்வம் சார் முதலில் என்கிட்டே சொல்லும்போது இது ரொம்ப சின்ன கேரக்டரா இருக்கு.. என்னால பண்ண முடியாது என சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் சொல்லும் போதே நீங்க  திரும்பவும் சீரியலில் என்ட்ரி கொடுப்பீங்க அப்படினுதான் சொன்னார். ஆனா அது எப்போ வரும் எவ்வளவு சீக்கிரம் வரும் என எதுவும் தெரியாது. அது முழுக்க முழுக்க அவரோட முடிவுதான்" என்ற ஹேமா தயாள். 



ஹேமா தயாள் ஒரு பிரபலமான குரூப் டான்சர். அதிலும் குறிப்பாக அவர் நடிகர் தனுஷுடன் இணைந்து மிகவும் ஹிட்டான பாடலான "ரகிட்ட ரகிட்ட..." என்ற பாடலில் அவர் கொடுத்த கியூட் எக்ஸ்பிரஷன் எக்கச்சக்கமாக ட்ரோல் செய்யப்பட்டு அந்த மீம்ஸ் மிகவும் வைரலானது. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் ஹேமா தயாள். 


இந்த நேர்காணல் மூலம் ஹேமா தயாள் ரீ என்ட்ரி நிச்சயம் இருக்கும் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார் என்பதால் அது எப்போ எப்படி  வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.