விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் என்றுமே உள்ளது. அதிலும் குறிப்பாக ரியாலிட்டி ஷோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. கவலைகள் அனைத்தையும் மறந்து வாய்விட்டு சிரிக்க கூடிய ஒரு புதுமையான நிகழ்ச்சி 'குக்கு வித் கோமாளி'. கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. 


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொள்பவர்கள் மட்டுமின்றி கோமாளிகளாக வருபவர்களுக்கும் ஒரு வளமான எதிர்காலம் கிடைத்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களாக நடுவர்களாக இருந்து சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி வந்தார்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட். ஆனால் தற்போது இந்த ஐந்தாவது சீசனில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகியதால் அவருக்கு பதில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கசாமி நடுவராக என்ட்ரி கொடுக்க உள்ளார். 




குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக என்ட்ரி கொடுக்கிறார்கள் என்பது குறித்த சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், கோமாளிகளாக என்ட்ரி கொடுப்பவர்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கலகலப்பான புதிய ப்ரோமோ ஒன்றை குக் வித் கோமாளி டீம் வெளியிட்டுள்ளது. 


சரத், புகழ், சுனிதா, குரேஷி உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே கடந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலக்கியவர்கள் இந்த சீசனிலும் தொடர அவர்களுடன் வேறு சில புது கோமாளிகளும் இணைந்துள்ளனர். ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா உள்ளிட்டோர் இந்த சீனில் புது என்ட்ரியாக நுழைகிறார்கள். 


 



இந்த சீசனை மணிமேகலை மற்றும் தர்ஷன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர். வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. குக்கு வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வழக்கம் போல பல புதுமைகளுடன் கலகலப்பாக ஒளிபரப்பாக உள்ளது.