"மோகினி ஆட்டம் ஆரம்பம்: மோகனின் உயிருக்காக நாகமணி தேடலில் தியா மற்றும் நிஷாந்தி


 


மோகனைக் காப்பாற்ற நிஷாந்தி தனது ஆபரணங்களை மஹா அசூரரிடம் ஒப்படைக்கத் தயாராகிறாள், ஆனால் விஷ்வன் தலையிட்டு மஹா அசூரரின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறான். நிஷாந்தி பின்னர் மஹா அசூரரைத் தாக்க முன் வர,  அசூரனோ அவளுடன் போரிட தனது வல்லமைமிக்க ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான். அப்போது மோகன் வரவே மஹா அசூரரின் ஆயுதம் மோகனை தாக்கவே அவன் உயிருக்கு போராடும் நிலையில் தள்ள படுகிறான்.


 


மோகனின் உயிரை காப்பாற்ற நாகமணி உதவுமெனவும், நாகமணியைப் பாதுகாக்கும் விஷப் பாம்பு காலசர்பிகாவைப் பற்றியும் நிஷாந்தி தியாவிடம் கூறுகிறாள். கூடுதலாக, நாகமணியின் இருப்பிடத்திற்கு செல்லும் பயங்கரமான பாதையில் அவர்கள் செல்லும்போது நிஷாந்தி சிக்கிக் கொள்கிறார். மோகனின் தாயான ஜோதி ஒருபுறமும், ஜோதி போல் தோற்றமளிக்கும் நாகினி மறுபுறமும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தியா, யாரை நம்புவது என்ற குழப்பத்தை எதிர்கொள்கிறாள். 


 


காலசர்பிகாவின் உண்மையான உருவம் தெரியவர, தியா நாகமணியைக் கண்டுபிடித்து அவளை எதிர்கொள்ள முன்வருகிறாள். தியாவும் நிஷாந்தியும் காலசர்பிகாவிடம் இருந்து தப்பிக்க, உமேஷ் மஹா அசூரரின் வருகையால் அதிர்ச்சியடைகிறார். தியா மோகனைப் பாதுகாக்க முன்வர,  அவள் மஹா அசுரரின் கோபத்திற்கு உட்படுகிறாள். தியா மற்றும் நிஷாந்தி மோகனை காப்பாற்றுவதில் வெற்றி பெறுவார்களா? அல்லது மஹா அசூரரின் கோபம் அவர்களின் முயற்சிகளை தோற்கடிக்குமா?


 


'மோகினி ஆட்டம்  ஆரம்பம்' தொடரில் திருப்பமான நிகழ்வுகளைக் காண கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு தவறாமல் பாருங்கள்."