தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை வருவதையொட்டி, சில ஊர்களில் தொடர்ந்து சனி, ஞாயிறு,திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தீபாவளி அன்று புதுபடத்தை பார்க்க ஆர்வமாக மக்கள் தியேட்டர்களை நோக்கி படம் எடுப்பர். சிலர் வீட்டிலே டி.வியை பார்த்து பொழுதை போக்குவர். அப்படி பட்ட நபர்களுக்கு கலர்ஸ் தமிழ் எனும் சேனல், இந்த தீபாவளி கொண்டாடத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், சிறப்பு படங்களையும் ஒளிபரப்ப உள்ளனர்.




அக்டோபர் 23, ஞாயிறு காலை 11:00 மணிக்கு : பீம்லா நாயக் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை இந்த சேனல் ரசிகர்களுக்காக வழங்குகிறது.   நடிகர் பவன் கல்யாண், நடிகர் ராணா டகுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இதன் திரைக்கதை, ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துணை ஆய்வாளர் பீம்லா நாயக் (நடிகர் பவன் கல்யாண்) மற்றும் ராணுவத்தில் ஹவில்தாராக முன்பு பணியாற்றிய டேனியல் சேகர் (நடிகர் ராணா டகுபதி) ஆகியோருக்கு இடையிலான மோதலையும், எதிர்ப்பு உணர்வையும் சுற்றி பிண்ணப்பட்டிருக்கிறது.  ஊழலுக்கு சரணாகதி அடையும் வகையில் பீம்லாவை தந்திரமாக டேனியல் சிக்கவைக்கும் நிகழ்வோடு இந்த சுவாரஸ்யமான கடும் மோதல் ஆரம்பமாகிறது சண்டைக் காட்சிகள் நிறைந்த பரபரப்பு சற்றும் குறையாத  இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஞாயிறு தினத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கும் என்பது நிச்சயம்.





பேரானந்தம் தருவது ‘காதலா அல்லது திருமண வாழ்க்கையா’ என்ற தலைப்பில் ஆர்ஜே ஆனந்தி, கல்வியாளர் வேதநாயகி, விஜே ஆண்ட்ரூ, கல்வியாளர் கல்பனா தர்மேந்திரா, கல்வியாளர் நவ்ஜோதி மற்றும் பேச்சாளர் சசிலயா போன்ற பிரபல பேச்சாளர்கள் இதில் உரையாற்றுகின்றனர். திருமண அமைப்பு மற்றும் காதல் என்ற கருத்தாக்கம் மீது தங்களது கண்ணோட்டங்களையும் பார்வையாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி அக்டோபர் 24, திங்கள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது.


இதற்கும் கூடுதலாக, தங்களது அபிமான நெடுந்தொடர் நிகழ்ச்சிகளான வள்ளி திருமணம், மந்திரப் புன்னகை, ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா, சில்லுனு ஒரு காதல், கண்ட நாள் முதல் மற்றும் பச்சகிளி ஆகியவற்றின் தங்கள் அன்புக்குரிய நடிகர் நடிகையர் பங்கேற்கும் கலர்ஸ் நம்ம வீட்டு தீபாவளி, அற்புதமான நிகழ்ச்சியில் பல்வேறு கேம்கள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். 


இதைத்தொடர்ந்து, மதியம் 12.00 மணிக்கு இந்த சிறப்பு சமையல் நிகழ்ச்சியான கலக்கல் ஸ்பெஷல் சமையல் என்பது சமையல் மற்றும் உணவு ஆர்வலர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருக்கிறது.  இந்திய, இத்தாலிய மற்றும் காண்டினெண்டல் சமையல் முறையிலான பல்வேறு உணவுகளை தயாரிப்பது பற்றி இது சுவைபட விளக்கவிருக்கிறது.  






கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இதுபற்றி கூறியதாவது: “இந்த தீபாவளிக்கு சுவாரஸ்யத்தையும் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக்கங்களையும் கொண்ட பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  வேறுபட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் / பட்டிமன்றம் ஆகியவற்றின் கலவையான இந்த கொண்டாட்ட நிகழ்வின் காரணமாக, தமிழ்நாட்டில் மட்டுமன்றி, உலகின் பிற பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இந்த தீபாவளி கண்களுக்கும், மனங்களுக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் வழங்கும் அற்புதமான அனுபவமாக இருக்கும்.”


 கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்து, மகிழ்ச்சியாலும், கேளிக்கையாலும் உங்கள் இல்லங்களை நிரப்புங்கள். தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.